இளம்பெண்கள் தான் குறி: இந்திய வம்சாவளி மருத்துவரின் அதிர்ச்சி பின்னணி

London Indian Origin
By Arbin Aug 13, 2022 03:39 AM GMT
Report

*நீண்ட 11 ஆண்டுகள் பல இளம் பெண்களை துஸ்பிரயோகம் செய்துள்ளது நிரூபணம். நிர்மல் தொடர்பில் பொலிசாருக்கு புகார்

*நிர்மல் தமது பதவியை துஷ்பிரயோகம் செய்தார், தற்போது அவரது செயல்களின் விளைவுகளை எதிர்கொள்கிறார்

லண்டனில் இளம் பெண் நோயாளிகளை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் இந்திய வம்சாவளி மருத்துவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட 11 ஆண்டுகள் பல இளம் பெண்களை துஸ்பிரயோகம் செய்துள்ளது நிரூபணமான நிலையில், தற்போது 79 வயதாகும் முன்னாள் மருத்துவர் லலித்குமார் நிர்மல் என்பவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Croydon மற்றும் Sydenham உட்பட பல்வேறு இடங்களிலும், அதே போல் வேல்ஸிலும் தம்மை நாடி வந்த இளம் பெண் நோயாளிகளை நிர்மல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். கடந்த 2019ல் முதன்முறையாக நிர்மல் தொடர்பில் பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்கள் தான் குறி: இந்திய வம்சாவளி மருத்துவரின் அதிர்ச்சி பின்னணி | North London Doctor Abusing Young Girl

@Getty

சம்பவம் நடக்கும் காலகட்டத்தில் இவர் பொது மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தீவிர விசாரணைக்கு பின்னர் 2021 மே மாதம் நிர்மல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

தொடர்ந்து 14 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. மட்டுமின்றி, இன்னொரு 14 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக கூறி 4 பிரிவுகளிலும் வழக்கு பதியப்பட்டது.

பாதிக்கப்பட்ட இந்த இரு சிறுமிகளும் மருத்துவர் நிர்மலுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்குகளில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், மருத்துவர் நிர்மலுக்கு 15 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மதிப்புமிக்க மருத்துவ பணியின் மறைவில் இருந்து கொண்டு நிர்மல் தொடர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என நீதிமன்றத்தில் அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

இளம்பெண்கள் தான் குறி: இந்திய வம்சாவளி மருத்துவரின் அதிர்ச்சி பின்னணி | North London Doctor Abusing Young Girl

@getty

மட்டுமின்றி, பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றிருந்த மருத்துவர் நிர்மல், தம்மால் பாதிக்கப்பட்ட ஒருவரை, அவரது பால்ய காலத்தில் இருந்தே துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

மருத்துவர் நிர்மலால் பாதிக்கப்பட்ட பலர் அந்த சுற்றுவட்டாரத்தில் வசிக்கலாம், அவர்கள் கண்டிப்பாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பொது மக்கள் தாமாகவே முன்வந்து புகார் செய்தால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும்.

பாதிக்கப்பட்டிருந்தால், தயவுசெய்து காவல்துறையிடம் பேசுங்கள். நிர்மல் தமது பதவியை துஷ்பிரயோகம் செய்தார், தற்போது அவரது செயல்களின் விளைவுகளை எதிர்கொள்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US