அசுர வேகத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்: லண்டன் சாலையில் நடந்த கோர சம்பவம்
வடக்கு லண்டனில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் கொல்லப்பட்ட வழக்கில் 22 வயது இளைஞர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் அசுர வேகத்தில்
ஹாம்ப்ஷயர் பகுதியில் பட்டப்பகலில் இந்த சாலை விபத்து நேர்ந்துள்ளது. கடந்த 2021 நவம்பர் மாதம் 76 வயதான கென்னத் கல்லன் என்பவர் தமது மனைவி லினா கல்லன் என்பவருடன் Clarence Esplanade பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
@PA
அந்த வேளை, தமது மோட்டார் சைக்கிளில் அசுர வேகத்தில் சென்ற 22 வயது முகமது ராஜா என்ற இளைஞர் கென்னத் கல்லன் மீது பலமாக மோதியுள்ளார். இதில் கல்லன் தூக்கி வீசப்பட, சம்பவயிடத்திலேயே கல்லன் பரிதாபமாக பலியானார்.
மணிக்கு 30 மைல்கள் வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட சாலையில் முகமது ராஜா மணிக்கு 75 மைல்கள் வேகத்தில் பயணித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
குறித்த சம்பவத்தில் கல்லனின் மனைவி லினா கல்லன் காயங்கள் ஏதுமின்றி தப்பியுள்ளார். வேக கட்டுப்பாடு இருக்கும் பகுதியில் ராஜா கண்டிப்பாக அதை பின்பற்றியிருக்க வேண்டும் எனவும்,
சாலையை கடக்கும் நபரை ராஜா பார்த்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என்றே விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
துயரமான உயிரிழப்புக்குக் காரணம்
மேலும், சவுத்சீ தெருக்களை இளைஞர் ராஜா ஒரு பந்தயப் பாதையாகக் கருதியிருக்கிறார், மற்றவர்களின் வாழ்க்கையைப் புறக்கணித்ததே இந்த துயரமான உயிரிழப்புக்குக் காரணம் எனவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
Image: Hampshire Constabulary
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், இளைஞர் ராஜாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 2 ஆண்டுகள் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.