வட கடலில் எண்ணெய் டேங்கர், சரக்குக் கப்பல் மோதல்! 32 பேர் உயிரிழப்பு
வட கடலில் எண்ணெய் டேங்கர் மற்றும் சரக்குக் கப்பல் மோதலை தொடர்ந்து தீவிர மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கப்பல் விபத்து
வட கடலில் இன்று காலை எண்ணெய் டேங்கர் மற்றும் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில், இரு கப்பல்களிலும் தீப்பிடித்துள்ளது.
இந்த விபத்தானது கிழக்கு யார்க்ஷயர் கடற்கரைக்கு அருகே நிகழ்ந்துள்ளது.
போர்த்துகீசிய கொடி ஏந்திய சோலாங்(Solong) என்ற கொள்கலன் கப்பலும்,(container ship) அமெரிக்க கொடி ஏந்திய ஸ்டெனா இம்மாகுலேட்(Stena Immaculate) என்ற டேங்கர் கப்பலும் இந்த விபத்தில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை 32 பேர் உயிரிழந்து இருப்பதாக கிரிம்ஸ்பி கிழக்கு துறைமுகத்தின் தலைமை நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார்.
தீவிர மீட்பு பணிகள்
இங்கிலாந்தின் HM கடலோர காவல்படை (HM Coastguard) உடனடியாக மீட்பு பணிகளைத் தொடங்கியுள்ளது.
ராயல் தேசிய லைஃப் போட் நிறுவனம் (RNLI) தகவலின்படி, கப்பல்கள் மோதிய வேகத்தில் பல நபர்கள் கப்பல்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
🚨 Tanker and Cargo Ship Collide in the North Sea
— NEXTA (@nexta_tv) March 10, 2025
A massive fire erupted after fuel spilled and ignited following a collision off the coast of Yorkshire, UK. Rescue boats and a helicopter have been deployed, while firefighting vessels are en route.
The Stena Immaculate tanker… pic.twitter.com/v0XOEdN1S0
ஹம்பர்சைடில் இருந்து கடலோர காவல் படை மீட்பு ஹெலிகாப்டர், ஸ்கெக்னஸ், பிரிட்லிங்டன், மேபிள் தோர்ப் மற்றும் கிளீதோர்ப்ஸ் ஆகிய இடங்களில் இருந்து லைஃப் போட்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
இந்த விபத்து, GMT 09:48 மணிக்கு நிகழ்ந்ததாக HM கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |