பிரித்தானிய பூங்காவில் சடலமாக கிடந்த நபர்: இரண்டாவது நபரை கைது செய்த பொலிஸார்!
பிரித்தானியாவின் நார்த்தாம்டன்ஷையரில் நடந்த கொலை வழக்கில் இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட நபர்
பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட நபரின் மரணம் தொடர்பாக இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நார்த்தாம்டன் பகுதியில் அக்ஷனியர்ஸ் கோர்ட்-க்கு பின்னால் ஆகஸ்ட் 1ம் திகதி அதிகாலை 6:30 மணிக்கு 57 வயதுடைய ராபர்ட் பிரவுன் என்பவர் நடைபாதையில் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் அவர் காயம் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இரண்டாவது நபர் கைது
இந்த சம்பவத்தில் கடந்த புதன்கிழமை 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில்,வெள்ளிக்கிழமை 41 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆகஸ்ட் 1ம் திகதி அக்ஷனியர்ஸ் கோரிட் பகுதிக்கு அருகில் நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு துப்பறியும் ஆய்வாளர் டோரி ஹாரிசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |