இந்தியா - நார்வே வலுவான இருதரப்பு உறவு! தூதரங்களின் வரலாறு, விசா நடைமுறைகள் முழுவிவரம்
இந்தியா - நார்வே இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கி தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ராயல் நார்வே தூதரகம் (Royal Norwegian Embassy) செயல்பட்டு வருகிறது.
டெல்லியில் அமைந்துள்ள ராயல் நார்வே தூதரகம், இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளான இலங்கை, பூடான் மற்றும் மாலத்தீவுகள் உடனான இராஜதந்திர உறவுகளையும் மேற்பார்வையிட்டு வருகிறது.

டெல்லியில் அமைந்துள்ள ராயல் நார்வே தூதரகம், சென்னை மற்றும் கொல்கத்தாவில் அமைந்துள்ள நார்வே தூதரகங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
அதே சமயம் மும்பையில் அமைந்துள்ள நார்வே தூதரகம் சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர இருப்பை கணிசமாக பலப்படுத்துகிறது.
இந்தியா - நார்வே இருதரப்பு ஒத்துழைப்பு வரலாறு
1600ம் ஆண்டுகளின் முற்பகுதியில் இன்றைய தமிழ்நாட்டின் தரங்கம்பாடியில் டேனிஷ்-நார்வே வணிக நிலையம் செயல்பட்டு வந்து இருப்பது இந்தியா-நார்வே இடையிலான ஆழமான இருதரப்பு உறவுகளுக்கான வேர்களை எடுத்துக்காட்டுகிறது.
இருப்பினும் முறையான இராஜதந்திர உறவுகள் 1845 ம் ஆண்டு கொல்கத்தாவிலும், 1857 ம் ஆண்டு மும்பையிலும் தூதரகங்கள் திறக்கப்பட்ட பிறகு தொடங்கியுள்ளன.

தலைநகர் டெல்லியில் 1952ம் ஆண்டே நார்வே தூதரகம் செயல்பட தொடங்கியது.
“இந்தியா உத்தி”
இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம், மக்கள் தொகை மற்றும் நீண்ட கடலோரப் பகுதிகள் ஆகியவை நார்வே உடனான தவிர்க்க முடியாத உறவு பாலத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி உலக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து நார்வேஜியன் அரசு கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவிற்கான “இந்தியா உத்தி” என்னும் திட்டத்தை வெளியிட்டது.
இந்த திட்டத்தின் கீழ், ஜனநாயகம், கடல்கள், ஆற்றல், காலநிலை, சுற்றுச்சூழல், ஆராய்ச்சி, உயர்கல்வி மற்றும் உலகளாவிய சுகாதாரம் ஆகிய இலக்குகளை அடைய முழு ஒத்துழைப்பு மற்றும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த “இந்தியா உத்தி” திட்டம் 2030ம் ஆண்டு வரை இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை புத்துயிர் பெறச் செய்யும்.
விசா மற்றும் குடியேற்ற அனுமதி தகவல்கள்
நார்வே நாட்டிற்கு செல்ல அல்லது குடியேற திட்டமிடுபவர்களுக்கு டெல்லியில் அமைந்துள்ள ராயல் நார்வே தூதரகம் ஷெங்கன்(Schengen) நாடுகளுக்கான விசா விண்ணப்பங்களை செயல்படுத்துகிறது.
இந்த ஷெங்கன் விசா மூலம் அனுமதிக்கப்படும் நபர்கள் 180 நாட்களுக்குள் 90 நாட்கள் வரை தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
90 நாட்களுக்கு மேல் நார்வேயில் தங்கி இருக்கவோ அல்லது பணிப்புரியவோ திட்டமிடுபவர்கள் வதிவிட அனுமதியை(Residence permit) வாங்க வேண்டும்.

விண்ணப்ப செயல்முறைகள்
இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை மற்றும் மாலத்தீவிலிருந்து நார்வேக்கு செல்ல விரும்புபவர்களான வருகையாளர் விசா(Schengen visa) அல்லது வதிவிட அனுமதி விசா(Residence visa) ஆகிய விண்ணப்பங்களை இந்தியாவில் உள்ள தூதரகங்கள் கையாளுகிறது.
அனைத்து விண்ணப்பங்களும் உள்ளூர் VFS குளோபல் விண்ணப்ப மையத்தில் நேரில் சமர்பிக்க வேண்டும். அதே இதற்கு முன் பதிவு செய்வது கட்டாயம்.
அவசர கால அனுமதிக்கு VFS சந்திப்பை பெற முடியவில்லை என்றால், தூதரகத்தின் விசா பிரிவை நேரடியாக மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.(VIsam.New.Delhi@mfa.no.)

நார்வேயில் உயர்கல்வி
நார்வேயில் உயர்ந்த கல்வித் தரங்கள் மற்றும் புதுமையான கற்றல் முறைகள் காரணமாக சர்வதேச மாணவர்களின் கவனத்தை நார்வே கவருகிறது.
நார்வேயில் பல்வேறு வகையான படிப்புகள் மற்றும் திட்டங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.
வருங்கால மாணவர்கள் படிப்பு விருப்பங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் விண்ணப்பங்கள் குறித்த கூடுதல் செயல் விவரங்களை அறிந்து கொள்ள studyinnorway.no என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.
| நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |