பிரித்தானியாவை மீண்டும் சேர்க்க வேண்டாம்: ஆண்டி பர்ன்ஹாமிற்கு நோர்வே பிரதமர் எச்சரிக்கை
Norway pm warns britain for eu single market: ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைக்குள் பிரித்தானியாவை சேர்க்க வேண்டாம் என நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் எச்சரித்துள்ளார்.
பிரெக்சிட் மறுசீரமைப்பின்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் மீண்டும் பிரித்தானியாவை சேர்க்க வேண்டாம் என ஆண்டி பர்ன்ஹாமிற்கு நோர்வே பிரதமர் எச்சரிக்கை செய்துள்ளார்.
ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பு
ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றுடன் நோர்வே நாடு ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளது.
இந்தக் கூட்டமைப்பில் இருப்பதால், தங்கள் நாடு பிரஸ்ஸல்ஸின் வழிகாட்டுதல்களை செயல்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது எனக் கூறி நோர்வேயின் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் (Jonas Gahr Store) பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பின்பற்ற வேண்டாம்
அதாவது, பிரெக்சிட் மறுசீரமைப்பின்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தையில் இணைவதன் மூலம் தங்கள் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டாம் என கூறியிருக்கிறார்.

பிரஸ்ஸல்ஸ் அதிகப்படியான கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வதை காரணமாக கூறும் ஜோனாஸ், பிரெக்சிட்டிற்கு பிறகு பிரித்தானிய நண்பர்கள் தன்னை அழைத்து "நோர்வே வழிமுறை பற்றி எங்களிடம் கூறுங்கள்" என்று கேட்டதாக தெரிவித்தார்.
மேலும், கூட்டமைப்பில் நாங்கள் அவர்களின் பெரும்பாலான முடிவுகளை எடுத்து, அவற்றை செயல்படுத்துகிறோம் என்று கூறினேன் என்றும் தெரிவித்தார்.
