உலகக் கிண்ணத்திற்கு 400 கிலோ மீன், சீஸ்: அமெரிக்க உணவுகளைத் தவிர்க்கும் நோர்வே அணி
அமெரிக்க உணவுகளைப் புறக்கணிக்கும் முடிவுடன், நோர்வே அணியின் நிர்வாகிகள் 400 கிலோவுக்கும் அதிகமான மீன் மற்றும் சீஸை அமெரிக்காவில் உள்ள தங்கள் உலகக் கிண்ணம் முகாமிற்கு இறக்குமதி செய்துள்ளனர்.
நோர்டிக் உணவு
வட அமெரிக்காவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எர்லிங் ஹாலண்ட் மற்றும் அவரது அணியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்; இவ்வாரத் தொடக்கத்தில் ஈராக் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கள் பயணத்தை மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளனர்.
இந்த முறை, அமெரிக்க உணவுகளைத் தவிர்த்து, பாரம்பரிய நோர்டிக் உணவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு, நட்சத்திரங்களுக்கு வழக்கமான நோர்வேஜியன் உணவுகளே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், போட்டித் தொடரின்போது வீரர்கள் உண்டு மகிழ்வதற்காக, 300 கிலோவுக்கும் அதிகமான அட்லாண்டிக் சால்மன் மற்றும் வெள்ளை மீன்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
6,000 ஆரஞ்சுப் பழங்கள்
நோர்வே அணி நிர்வாகம் 'ப்ரூனோஸ்ட்' (brunost) எனப்படும் பாரம்பரிய நார்வேஜிய பழுப்பு நிற கேரமலைஸ் செய்யப்பட்ட சீஸை 116 கிலோவிற்கும் அதிகமாகக் கொண்டு வந்துள்ளது.
மட்டுமின்றி, 6,000 ஆரஞ்சுப் பழங்களும் நோர்வேயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் முகாமிட்டுள்ள நோர்வே அணியின் உணவுச் சேவைப் பிரிவை, அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர் ஆரோன் எஸ்பெலேண்ட் வழிநடத்துகிறார்.
இவர் கடந்த 35 ஆண்டுகளாக நோர்வே தேசிய அணியுடன் பணியாற்றி வருகிறார். ஹாலண்ட் மற்றும் அவரது அணியினர், பாரம்பரிய நோர்டிக் உணவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு,
வழக்கமான நோர்வேஜியன் உணவுகளையே நான்கு வேளையும் உட்கொள்வதாகக் கூறப்படுகிறது. இதனால் நோர்வே அணி அமெரிக்க உணவுகளை மொத்தமாகவே தவிர்க்க உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |