FIFA மகளிர் WC 2023: நார்வே கோல் மழை! ஜேர்மனி அதிர்ச்சி தோல்வி, வெளியேறிய நியூசிலாந்து
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவிடம் 2-1 என ஜேர்மனி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஜேர்மனி அதிர்ச்சி தோல்வி
Allianz மைதானத்தில் நடந்த போட்டியில் ஜேர்மனி - கொலம்பியா அணிகள் மோதின. இரு அணி வீராங்கனைகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 52வது நிமிடத்தில் கொலம்பியாவின் லிண்டா அபாரமாக கோல் அடித்தார்.
அதன் பின்னர் கொலம்பியா கோல் கீப்பர் தவறிழைத்ததால் ஜேர்மனி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. 89வது நிமிடத்தில் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அலெக்ஸாண்ட்ரா போப் அதனை கோலாக மாற்றினார். இதனால் 1-1 என சமநிலை ஆனது.
ஆனால் கூடுதல் நேரத்தின் 6வது நிமிடத்தில் கொலம்பியா வீராங்கனை மனுல வானெகாஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். ஜேர்மனி அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
AP
நார்வே கோல் மழை
பிலிப்பைன்ஸை எதிர்கொண்ட நார்வே அணி 6-0 என பந்தாடியது. சோஃபி ரோமன் ஹூக் 3 கோல்கள் அடித்தார். இதன்மூலம் இரண்டாவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
சுவிற்சர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி 0-0 என டிராவில் முடிந்தது.
AP Photo/Abbie Parr
நியூசிலாந்து வெளியேற்றம்
இந்த முடிவினால் புள்ளிகள் அடிப்படையில் சுவிற்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறியது.
REUTERS
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |