பிரித்தானியாவில் 2 பிள்ளைகளுடன் மரணமடைந்த தந்தை... மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: விலகாத மர்மம்
பிரித்தானியாவின் Norwich பகுதியில் இளம் வயது பிள்ளைகள் இருவருடன் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய கேள்விகளை பொலிசார் முன்வைத்துள்ளனர்.
இரு இளம் வயது சிறார்கள்
பிரித்தானியாவின் Norwich பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இரு இளம் வயது சிறார்கள் மற்றும் அவர்களின் தந்தையுடன் பெண் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Credit: East Anglia News Service
இந்த நிலையில், அந்த குடியிருப்பில் இருந்து முன்னெடுக்கப்பட்ட 999 இலக்க அழைப்புக்கு பொலிசார் பதிலளிக்க மறுத்ததன் காரணம் குறித்து சிறப்பு அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
ஜனவரி 19ம் திகதி பொலிசார் அந்த குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ளனர். இந்த நிலையிலேயே அந்த கோர காட்சியை கண்டுள்ளனர். இதில் 45 வயது Bartlomiej Kuczynski என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது பிள்ளைகள் 7 மற்றும் 12 வயதுடைய இருவரும் சடலமாக காணப்பட்டனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்
இந்த நிலையில், இந்த கூட்டு மரணத்திற்கு காரணம் இவர்களில் ஒருவரா என்பது தொடர்பில் பொலிசார் விசாரிக்க உள்ளனர். உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே, அதிகாரிகளால் முடிவுக்கு வர முடியும் என்றும் கூறப்படுகிறது.
Credit: East Anglia News Service
999 இலக்கத்திற்கு அழைப்பு வந்துள்ளதை பொலிசார் உறுதி செய்துள்ளனர். பகல் 6 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பொலிசார் சம்பவயிடத்திற்கு செல்ல தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அந்த தந்தை மற்றும் பிள்ளைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என்பதில் மர்மம் நீடிப்பதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, பொதுமக்களில் ஒருவரும் பொலிசாருக்கு இந்த மரணம் தொடர்பில் எச்சரித்துள்ளார். அந்த நபர் தொடர்பிலும் பொலிசார் விசரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |