யூரோ கிண்ணம் யார் வெல்வார்? நாஸ்ட்ராடாமஸின் பரம்பரையை சேர்ந்தவர் கணிப்பு
பிரான்ஸ் நாட்டவரான நாஸ்ட்ராடாமஸின் பரம்பரையை சேர்ந்தவர் யூரோ கிண்ணம் 2024ல் யார் வெல்வார்கள் என்ற கணிப்பை வெளியிட்டுள்ளார்.
நாஸ்ட்ராடாமஸின் 9வது தலைமுறை
யூரோ கிண்ணம் 2024ல் இங்கிலாந்து அணி இறுதி வரையில் முன்னேறுமா என்பது தொடர்பிலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்து அணி தங்களின் முதல் ஆட்டத்தில் செர்பியாவுடன் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்தது.
ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் டென்மார்க்குடன் சமன் செய்தது. தற்போது இங்கிலாந்து அணியின் இரண்டாவது ஆட்டம் குறித்தே மொத்த இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புகழ்பூத்த நாஸ்ட்ராடாமஸின் 9வது தலைமுறையை சேர்ந்தவரான Milan Radonjic என்பவர் யூரோ கிண்ணம் குறித்த தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், யூரோ கிண்ணம் 2024ல் முக்கிய நாடுகளின் அணிகள் தடுமாறும், இங்கிலாந்து அணி சவால்களை சமாளிக்கும், வெற்றியை ருசித்தாலும் வியப்பில்லை என்று பதிவு செய்துள்ளார்.
ஹரி கேன் 10 கோல்களுக்கு மேல்
முதன்மை அணிகள் என அவர் குறிப்பிடுவது ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் அணிகளாக இருக்கலாம் என்றும், இந்த அணிகள் தங்கள் முதல் ஆட்டங்களில் வெற்றியை ருசித்துள்ளன.
மேலும் இங்கிலாந்தின் 58 ஆண்டு சாபம் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது என்றும் Milan Radonjic குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்து அணித் தலைவர் ஹரி கேனின் ஆட்டம் சிறப்பானதாக இருக்கும் என்றும் கணித்துள்ளார்.
யூரோ கிண்ணம் 2024ல் ஹரி கேன் 10 கோல்களுக்கு மேல் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்துக்கு இனி அதிகபட்சம் 5 ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், ஹரி கேன் எவ்வாறு 10 கோல்களுக்கு மேல் பதிவு செய்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |