இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு துளி நீர் கூட செல்லாது: அமைச்சர் உறுதி
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஒரு துளி நீர் கூட செல்லாது என்று இந்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் உறுதி
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வந்தபோது கணவர் மரணம்.., குழந்தைக்கு பதில் சொல்ல முடியவில்லை என மனைவி கண்ணீர்
இதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுத்தார்.
அதன்படி, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானிற்கு செல்லும் சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய அமைச்சர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கூறுகையில், "சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக மோடி அரசு எடுத்த முடிவு நியாயமானது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று உறுதியளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |