ஒரே ஒரு சிக்கல்... 5 மில்லியன் பிரித்தானியர்கள் ஐரோப்பா செல்ல முடியாது!
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இந்திய தயாரிப்பை போட்டுக்கொண்ட மில்லியன் கணக்கிலான பிரித்தானியர்களுக்கு புதிய சிக்கல் ஏறட்டுள்ளது.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இந்திய தயாரிப்பை போட்டுக்கொண்ட சுமார் 5 மில்லியன் பிரித்தானிய மக்கள் விடுமுறையை கொண்டாட ஐரோப்பா நாடுகளுக்கு செல்ல முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை ஆஸ்ட்ராசெனகாவின் இந்திய தயாரிப்பை ஏற்க மறுத்துள்ளதே காரணமாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, இந்த மாத இறுதிக்குள் அம்பர்-பட்டியலில் கொண்டு வரப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் போது தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நீக்க பிரித்தானியா அரசாங்கம் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில்,
கண்டிப்பாக இந்த ஆஸ்ட்ராசெனகா இந்திய தயாரிப்பு தடுப்பூசி விவகாரம் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
கோவிஷீல்ட் என அறியப்படும் இந்திய தயாரிப்பு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு ஐரோப்பிய எல்லைகளில் விலக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் அற்ற பயணத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அமுலுக்கு கொண்டு வந்துள்ள கொரோனா சான்றிதழில், இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் இடம்பெறவில்லை.
மாறாக, பைஸர், மாடர்னா, ஜோன்சன் மற்றும் பிரித்தானியா அல்லது ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டு Vaxzevria என்ற பெயரில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள ஆஸ்ட்ராசெனகா மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இதில் ஏதேனும் ஒரு தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டவர்களையே ஐரோப்பிய நாடுகளில் தற்போது அனுமதிக்கின்றனர்.
கோவிஷீல்ட் தடுப்பூசியை பொறுத்தமட்டில், 4120Z001, 4120Z002 மற்றும் 4120Z003 தொகுதி எண்கள் கொண்ட தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரித்தானியர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தால் இதுவரை இந்திய தயாரிப்பு தடுப்பூசிக்கு அனுமதி கோரப்படவில்லை என்றே தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் தற்போது 5 மில்லியன் பிரித்தானியர்கள் ஐரோப்பிய நாடுகளில் தங்கள் விடுமுறையை கழிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் இருந்து ஒப்புதல் பெறாததால், பிரித்தானியர்கள் அமெரிக்காவும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.