தினமும் பல் துலக்காமல் இருந்தால் என்னென்ன ஆகும் தெரியுமா? இதய நோய் கூட வருமாம் உஷார்
பல், மற்றும் வாய் சுத்தமின்மையினால் வாய் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு சத்தியையும் குறைக்கிறது.
சமீபத்தில் இரு வாரம் பல் துலக்காமல் இருந்தால் என்ன உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று ஓர் ஆராய்ச்சியை நடத்தினர்.
இரு வாரங்கள் பல் துலக்காமல் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தியின் காவலர்கள் என்று கருதப்படும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படுகிறது என்று அந்த ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.
ஈறுகளில் தொற்று
தொடர்ந்து இரு வாரங்கள் பல் துலக்காமல் இருந்ததால், ஈறுகளில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த ஈறுகளில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு ஏற்பட்டதாகவும் மேலும் அந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: தூங்கும் போது இந்த பிரச்சனை எட்டி பார்க்குதா? அப்போ இந்த ஆபத்தில் இருக்கீங்க உஷார்
சமீபத்திய அறிவியல் ஆய்வில், ஈறு சார்ந்த பிரச்சனைகள் அதிகரிப்பதன் காரணமாக, இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய், மறதி நோய் (அல்சைமர்), வாதம், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இயற்கை முறையே சிறந்தது
இந்த ஆய்வில் கலந்துகொண்டு, இரண்டு வரங்கள் பல் துலக்காமல் இருந்தவர்களது வெள்ளை அணுக்களை பரிசோதித்து பார்த்ததில் தான் இவ்வாறான தாக்கங்களும், பாதிப்புகள் உண்டாகலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பற்களை வெள்ளை ஆக்கும் என சந்தையில் ஏராளமான பொருட்கள் விற்கப்படுகிறது. ஆனால், அவை யாவும் முற்றிலும் பயனளிப்பது அல்ல என்றும் இயற்கையான பொருள்களை பயன்படுத்துவது தான் சிறந்த முறை என்றும் கூறப்படுகிறது.