கோலியின் வளர்ச்சி ஆச்சரியமானது! தென் ஆப்பிரிக்காவை ஈஸியா ஜெயிக்க முடியாது: ராகுல் டிராவிட்
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி என்பது எளிதில் கிட்டிவிடாது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
கோலி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டில் நாளை(26.12.2021) Centurion-ல் உள்ள SuperSport Park மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பிசிசிஐ ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் விளையாடும் போது, ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால், அது அவ்வளவு எளிதானது கிடையாது. தென் ஆப்பிரிக்கா மைதானத்தில் அதுவும் தென் ஆப்பிரிக்கா வீரர்களின் சொந்த மண்ணில் அவர்களை எதிர்கொள்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று கிடையாது.
நாம் சிறந்த ஆட்டத்தை கொடுக்க வேண்டும், அப்போது நமக்கு வெற்றிக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், அது மிகவும் எளிதில் நமக்கு கிடைத்துவிடாது.
கோஹ்லி குறித்து கூறுகையில், கோலியின் வளர்ச்சி ஆச்சரியமானது. அவர் தன்னுடைய முதல் போட்டியில் களம் இறங்கிய போது, நான் அந்த போட்டியில் இருந்தேன். ஒரு கிரிக்கெட் வீரராகவும், தனி மனிதராகவும் அவருடைய 10 ஆண்டு கால வளர்ச்சி என்பது தனித்துவமானது என்று கூறியுள்ளார்.