குஷ்புவின் பிரச்சாரத்தில் 50 பேர் கூட இல்லை! ஆந்திராவில் ஏற்பட்ட சம்பவம்
நடிகையும், தேசிய மகளிர் உறுப்பினருமான குஷ்பு ஆந்திர மாநிலத்தில் பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேலூர் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த குஷ்பு, உடல்நலக்குறைவு காரணமாக பிரச்சாரம் மேற்கொள்வதில் இருந்து விலகியிருந்தார்.
ஆந்திராவில் பிரச்சாரம்
தற்போது நடிகை குஷ்பு தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், ஆந்திராவில் உள்ள அனக்காபள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.எம்.ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், குஷ்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட 50 பேர் கூட இல்லை. இதனால், குஷ்பு எதுவும் பேசாமல் கைகூப்பியபடி சென்றார். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |