கனடா வழங்கும் இந்த பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு job offer கூட தேவையில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
கனடா பல ஆண்டுகளாக பணியாளர் பற்றாக்குறையால் தடுமாறி வருகிறது.
அதுவும் பெருந்தொற்று காலத்தின்போது அந்த நிலை மேலும் மோசமாகிவிட்டது.
அந்த இழப்பை ஈடுகட்ட, அடுத்த மூன்று ஆண்டு காலகட்டத்திற்குள், 1.3 மில்லியன் புலம்பெயர்வோரை வரவேற்க கனடா இலக்கு நிர்ணயித்துள்ளது கனடா.
அப்படி புலம்பெயர்வோருக்காக கனடா உருவாக்கியுள்ள புலம்பெயர்தல் வழிமுறைகள் மற்றும் பணி அனுமதிகளில் Open Work Permit என்பதும் ஒன்று.
இந்த Open Work Permit என்னும் பணி அனுமதி, தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு (Labour Market Impact Assessment - LMIA) மற்றும், கனேடிய பணி வழங்குவோர் ஒருவர் வழங்கும் offer letter ஆகியவற்றின் தேவை இல்லாமலே நீங்கள் கனடா வர உதவுகிறது.
இந்த பணி அனுமதி, கனடா தகுதியற்றவை என ஒதுக்கி வைத்துள்ள, கட்டுப்பாடுகளுக்கு உட்படாத மற்றும் ஆபாச நடனங்கள் நடத்துபவை போன்ற சில நிறுவனங்கள் தவிர்த்து, மற்ற எந்த நிறுவனத்திலும் பணி செய்ய உங்களை அனுமதிக்கும்.
ஒரு முக்கிய விடயம், இந்த பணி அனுமதியை யார் வேண்டுமானாலும் பெறமுடியாது என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது.
யாரெல்லாம் இந்த பணி அனுமதியைப் பெற முடியும்?
சர்வதேச மாணவர்கள்
2021ஆம் ஆண்டில், பெரும்பாலான தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு தேவையற்ற பணி அனுமதிகள், முதுகலைப் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான பணி அனுமதி பெறத் தகுதி பெற்ற சர்வதேச பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டது.
நிரந்தர வாழிட உரிமம் பெற்ற, திறன்மிகு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் கணவர் அல்லது மனைவி, மற்றும் அவர்களை சார்ந்திருப்போர்
நிரந்தர வாழிட உரிமம் பெற்ற திறன்மிகு பணியாளர்களின் கணவர் அல்லது மனைவி, தங்கள் துணையுடன் கனடாவில் வாழும் பட்சத்தில், அவர்கள் உள்நாட்டு ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்போது, அவர்கள் Spousal Open Work Permit வகை பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கமுடியும்.
அதேபோல, சர்வதேச மாணவர்களின் கணவர் அல்லது மனைவி, தாங்கள் தங்கள் துணையுடன் உண்மையான உறவில் இருப்பதாக அரசிடம் நிரூபிக்கும் நிலையிலும், அந்த சர்வதேச மாணவர், தகுதியுடைய கல்வித் திட்டம் ஒன்றில் இணைந்திருப்பதை நிரூபிக்கும் நிலையிலும், அவர்கள் open work permit பெற இயலும்.
நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளவர்கள்
Bridging Open Work Permits (BOWPs) என்னும் வகை பணி அனுமதிகள், நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தின் பதிலுக்காக காத்திருக்கும் காலகட்டத்தில், அவர்கள் கனடாவில் தொடர்ந்து வாழ அனுமதிக்கின்றன. ஆகவே, வெளிநாட்டவர்களுடைய நிரந்தர வாழிட உரிம விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் முன் அவர்களுடைய தற்காலிக வாழிட உரிமம் காலாவதியானாலும், அவர்கள் தங்கள் பணி அல்லது தங்கள் சொந்த நாட்டை விடத்தேவையில்லை என்னும் நிலையை இந்த அனுமதிகள் உருவாக்கிக் கொடுக்கின்றன.
எத்தனை வகையான open work permit என்னும் அனுமதிகள் உள்ளன?
மூன்று வகையான open work permit என்னும் அனுமதிகள் உள்ளன
அவையாவன:
- Unrestricted open work permit
- Occupation restricted open work permit மற்றும்
- Restricted work permit
பரிசீலனைக்கான காலகட்டம்
நீங்கள் இவ்வகை பணி அனுமதிகளுக்கு, முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து, விசா நேர்காணல் முடிந்தபின், 3 முதல் 27 வாரங்களுக்குள் விசா பரிசீலிக்கப்படும்.
இந்த விசா, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
மேலதிக விவரங்களுக்கு... - https://economictimes.indiatimes.com/nri/work/you-dont-need-a-job-offer-to-apply-for-this-canadian-work-permit/articleshow/90286357.cms