ஐபிஎல் ஏலத்தில் ஒரு இலங்கை வீரர்கள் கூட எடுக்கப்படவில்லை! என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், இலங்கை வீரர்கள் ஒருவர் கூட எடுக்கப்படாமல் இருப்பது இந்த முறை தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில், எப்போதும் மேற்கிந்திய தீவு வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவர்.
ஆனால், இந்த முறை மேற்கிந்திய தீவு வீரர்கள் எவரையும் ஏலத்தில் எடுக்க அணியினர் ஆர்வம் காட்டவில்லை.
Check out how @mipaltan, @KKRiders, @DelhiCapitals & @ChennaiIPL stack up after the @Vivo_India #IPLAuction 2⃣0⃣2⃣1⃣ ? ? pic.twitter.com/Icx5LhHjv3
— IndianPremierLeague (@IPL) February 19, 2021
ஐபிஎல் அணிகளில் ஏற்கெனவே கெயில், ஆன்ட்ரூ ரஸல், சுனில் நரேன், கெய்ரன் பொலார்ட், ஹோல்டர், பிராவோ என பல வீரர்கள் இருந்தபோதிலும் புதிதாக ஏலத்தில் மேற்கிந்திய தீவு அணி சார்பில் ஆலன் மட்டுமே வாங்கப்பட்டார்.
அதேசமயம், ஷெல்டன் காட்ரெல், ஓஸ்னே தாமஸ், லீவிஸ், ரோவ்மன் பாவெல் ஆகியோர் இருந்தும் வாங்கப்படவில்லை.
அதிலும் குறிப்பாக, இலங்கை அணி சார்பில் ஒரு வீரர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது தான் பெரும் ஆச்சரியம்.
ஏனெனில், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பெரும்பாலும் ஆல்ரவுண்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் ஆகியோருக்குதான அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
Here's how the @SunRisers, @RCBTweets, @rajasthanroyals & @PunjabKingsIPL squads look after the @Vivo_India #IPLAuction 2⃣0⃣2⃣1⃣ ? pic.twitter.com/xyQAgLVV5R
— IndianPremierLeague (@IPL) February 19, 2021
இந்த இருதுறைகளிலும் சிறப்பு வாய்ந்த வீரர்கள் என மேற்கிந்திய தீவு அணியிலும், இலங்கையிலும் மிகக் குறைவு என்பதன் காரணமாகவே மேற்கிந்திய தீவு அணியில் இருந்து ஒருவரும், இலங்கையில் இருந்து எந்தவீரரும் தெரிவு செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.