உக்ரைனில் உயிரியல் ஆயுத நடவடிக்கைகள்... ஜேர்மனி மீது ரஷ்யா பரபரப்பு புகார்
ஜேர்மனி, உக்ரைனில் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
முன்பு, அமெரிக்கா உக்ரைனில் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது, அமெரிக்கா மட்டுமின்றி ஜேர்மனியும் உயிரியல் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதியான Maria Zakharova குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், தற்போது அந்த ஆயுதங்களை அவர்கள் உக்ரைனிலிருக்கும் ரஷ்யப் படைவீரர்கள் மீது பிரயோகிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் Maria தெரிவித்துள்ளார்.
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் இராணுவத்துக்கு ஜேர்மனி ஒரு பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக நிதியுதவி வழங்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.