தமிழக வீரர் நடராஜனை எடுக்காதது எங்களுக்கு பேரிழப்பு! காரணம் இதுதான் - SRH பயிற்சியாளர்
தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை வாங்க முடியாதது இழப்பு என சன்ரைசர்ஸ் ஐதராபாத் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
நடராஜனை தவறவிட்ட சன்ரைசர்ஸ்
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடந்தது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைப் பொறுத்தவரை சில முக்கிய வீரர்களை விலைக்கு வாங்கிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால், தமிழக வீரர் நடராஜனை (Natarajan) SRH தவறவிட்டது. இது சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
டேனியல் வெட்டோரி
சன்ரைசர்ஸில் விளையாடி வந்த நடராஜனை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு வாங்கியது.
இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் நடராஜனை எடுக்காததன் காரணத்தை சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி (Daniel Vettori) விளக்கியுள்ளார்.
அவர் கூறுகையில், "நடராஜனை வாங்காமல் விட்டது நிச்சயம் எங்களுக்கு இழப்புதான். அவரைப் போன்று ஒரு வீரரின் இடத்தை நிரப்புவது கடினம். இருந்தாலும் ஏலத்தின் முதல் பாதியிலேயே முகமது ஷமி, ஹர்ஷல் படேல் போன்ற வீரர்களின் பெயர்கள் வந்தபோது, அவர்களை வாங்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தோம். அதன் காரணமாகவே அவர்களை வாங்கினோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |