அசத்தும் விலையுடன் இந்தியாவில் அறிமுகமான CMF Phone 2 Pro: சிறப்பம்சங்கள் என்னென்ன?
நத்திங் நிறுவனத்தின் புதிய வரவுவாக இந்தியாவில் CMF போன் 2 புரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
துணை நிறுவனமான CMF
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நத்திங் நிறுவனம், தனது புதுமையான தொழில்நுட்ப சாதனங்களால் குறுகிய காலத்தில் பயனர்களை ஈர்த்துள்ளது.
ஹெட்செட் விற்பனையில் முதலில் களமிறங்கிய இந்நிறுவனம், 2022 ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட்போன் சந்தையிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் அவர்களின் தொலைநோக்கு பார்வையே நத்திங் நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.
Nothing like the new CMF arrivals.
— CMF by Nothing (@cmfbynothing) April 28, 2025
Meet CMF Phone 2 Pro. Refined in performance, wonderful by design.
And the next-generation of the Buds family. Here to elevate your sound, wherever you are in your audio journey.
Pre-order now. pic.twitter.com/xKl0PakdqB
இந்நிலையில், நத்திங் நிறுவனம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ‘CMF’ என்ற துணை நிறுவனத்தை 2023 ஆம் ஆண்டு உருவாக்கியது.
இந்த பிராண்டின் கீழ் ஏற்கனவே ‘CMF போன் 1’ வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவில் ‘CMF போன் 2 புரோ’ மாடலை அறிமுகம் செய்துள்ளது.
விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
திரை: 6.77 இன்ச் AMOLED திரை
செயலி: மீடியாடெக் டிமான்சிட்டி 7300 புரோ ப்ராசஸர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 15
பற்றரி: 5,000mAh
Exclusive drop.
— CMF by Nothing (@cmfbynothing) April 29, 2025
CMF Phone 2 Pro is landing at Nothing Store Soho.
Free Buds 2 with every purchase.
First come, first served. 3 May, 11AM BST. pic.twitter.com/wPV3UA1qPw
சார்ஜர்: 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் (போனுடன் வழங்கப்படுகிறது - நத்திங் நிறுவனத்தின் முதல் முறை)
வயர்லெஸ் சார்ஜிங்: 5 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உண்டு
பின்புற கேமரா: 50+50+8 மெகாபிக்சல் என மூன்று கேமராக்கள்
செல்ஃபி கேமரா: 16 மெகாபிக்சல்
ரேம்: 8ஜிபி
உள் சேமிப்பு: 128ஜிபி / 256ஜிபி
வண்ணங்கள்: 4 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது
விற்பனை தொடக்கம்: வரும் மே 5-ம் தேதி முதல்
விலை: ஆரம்ப விலை ₹18,999
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |