'ஒன்றும் சொல்வதற்கு இல்லை' மேகன்- ஹரி நேர்காணல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த போரிஸ் ஜான்சன்
மேகன் மற்றும் ஹரி அரச குடும்பத்தின் மீதும் மகாராணியார் மீதும் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் மறுத்துவிட்டார்.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கல் இருவரும் பிரித்தானிய அரச குடும்பத்தின் மீது பகிரங்கமான குற்றச்சட்டுகளை முன்வைத்துள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சசையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், ஒரு கொரோனா வைரஸ் செய்தி பற்றிய மாநாட்டில் இந்த பரபரப்பான நேர்காணல் பற்றி கேட்டபோது பதிலளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், எப்போதுமே மகாராணியின் மீது மிகுந்த அபிமானத்தை கொண்டிருப்பதாக கூறினார்.
மேலும் பிரித்தானியாவிலும், காமன்வெல்த் முழுவதிலும் அவர் ஒரு ஒன்றிணைக்கும் பாத்திரத்தை வகிப்பதாகவும் கூறினார்.
ஆனால், அரச குடும்பத்துடன் தொடர்புடைய விடயங்கள் என்று வரும்போது ஒரு பிரதம மந்திரியாக தனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அவர் கூறினார்.