புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு நாளை (18) நள்ளிரவு 12 மணி முதல் முற்றாக தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரவித்துள்ளது.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நள்ளிரவில் இருந்து பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
குறித்த காலப்பகுதியில் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன், உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.