மே 16 முதல்... கட்டாய மாஸ்க் அணிதல் விதி தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
மே 16ஆம் திகதி முதல், பிரான்சில் பொதுப்போக்குவரத்தில் பயணிப்போர் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை.
இந்த அறிவிப்பை, பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Véran வெளியிட்டுள்ளார்.
வரும் திங்கட்கிழமை, அதாவது மே 16 முதல், பொதுப்போக்குவரத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று கூறியுள்ள அவர், ஆனாலும், மாஸ்க் அணிய பரிந்துரை செய்யப்படுகிறது என்றார்.
பிரான்சில் பெருமளவில் கோவிட் தொற்று குறைந்துள்ளதைத் தொடர்ந்து, இனி மாஸ்க் கட்டாயம் என்னும் விதி தேவையில்லை என்றார் Véran.
அதே நேரத்தில், பிரான்சில் ஒரு இடத்தில் மட்டும் மாஸ்க் அணிதல் கட்டாயமாகும். அதாவது, மருத்துவமனைகள் முதலான இடங்களில் மாஸ்க் கட்டாயம். அத்துடன், கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற விதியும் தொடர்கிறது.