2022இல் பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனிக்கு வாகனங்களை கொண்டு வருவது தொடர்பாக வெளியாகியுள்ள ஒரு அறிவிப்பு
பிரித்தானியாவிலிருந்து ஜேர்மனி முதலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, வேன் அல்லது பெரிய கார் ட்ரெய்லர் ஆகியவற்றைக் கொண்டு வருவதற்கு இனி கூடுதலாக ஒரு உரிமம் பெறவேண்டியிருக்கும்.
2021இல் பிரெக்சிட் இறுதி நிலையை எட்டிய நிலையில், பிரித்தானியர்கள் தங்கள் வாகன ஓட்டுநர் உரிமங்களை ஜேர்மன் உரிமமாக மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
இந்நிலையில், தற்போது கூடுதலாக ஒரு மாற்றத்தை சாரதிகள் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அது என்ன?
- 2022இலிருந்து, பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஷெங்கன் பகுதிக்கு வேன் போன்ற பெரிய வாகனங்களைக் கொண்டு வர விரும்புவோர், சர்வதேச சரக்கு வாகனம் இயக்குவதற்கான உரிமம் ஒன்றைப் பெற்றிருக்கவேண்டும்.
- அதற்கான கட்டணம், ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கு 257 பவுண்டுகள், மற்றும் உரிமத்துக்காக கூடுதலாக 401 பவுண்டுகள். இந்த உரிமம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை 401 பவுண்டுகள் செலுத்தி புதுப்பிக்கப்படவேண்டும்.
எப்போதிலிருந்து?
இந்த மாற்றம், 2022, மே மாதம் 21ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகிறது.
யாருக்கெல்லாம் இந்த மாற்றம்?
இந்த மாற்றம் எல்லோரையும் பாதிக்கப்போவதில்லை. உங்கள் வாகனத்தின் அளவைப்பொருத்தும், நீங்கள் எதற்காக ஜேர்மனிக்கு வருகிறீர்கள் என்பதைப் பொருத்தும் அது முடிவு செய்யப்படும்.
நீங்கள் என்ன காரணத்துக்காக ஜேர்மனிக்கு வருகிறீர்கள்?
- வர்த்தக ரீதியில் அல்லாத சரக்குகளை கொண்டு வருவோருக்கு இந்த உரிமம் தேவையில்லை.
- உதாரணமாக, ஜேர்மனியிலிருக்கும் உங்கள் வீட்டுக்கு மரச்சாமான்களைக் கொண்டு வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு இந்த உரிமம் தேவையில்லை.
மேலதிக தகவல்களுக்கு...https://www.thelocal.de/20211227/brexit-new-licence-needed-to-bring-vans-and-trailers-from-uk-to-germany/