RSS கூட்டத்திற்காக 10 நாட்கள் விடுமுறை அளித்த பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்!
தமிழ்நாடு, ஊட்டியில் உள்ள தனியார் பள்ளி, RSS கூட்டத்திற்காக 10 நாட்கள் விடுமுறை அளித்ததற்கு விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
RSS கூட்டத்திற்காக விடுமுறை அளித்த பள்ளி
தமிழ்நாடு மாநிலம், ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியான ஜேஎஸ்எஸ் பள்ளிக்கு 10 நாள்கள் விடுமுறை அளித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மோகன் பகவத் பங்கேற்ற RSS அமைப்பின் கூட்டத்திற்காக பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
இதனை கண்டித்து ஊட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாநில கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்
பள்ளிக்கு 10 நாள்கள் விடுமுறை அளித்ததற்காக விளக்கம் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல், விடுமுறை தொடர்பாக தகுந்த விளக்கம் அளிக்கவில்லையென்றால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கனமழை காரணமாக 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் பள்ளியில் தான் கூட்டத்தை நடத்த வேண்டுமா என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |