ரத்தக் களரியான நாட்டிங் ஹில் கார்னிவல்... உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் ஒருவர்
வார இறுதியில் முன்னெடுக்கப்பட்ட நாட்டிங் ஹில் கார்னிவலில் எட்டு பேர் கத்தியால் குத்தப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் ஆபத்தான நிலையில்
மேற்கு லண்டனில் வங்கி விடுமுறையைக் கொண்டாட வந்திருந்த பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்த சுமார் ஆயிரம் பொலிசார் களமிறக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் மோசமான சம்பவங்கள் நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
@epa
29 வயதான நபர் வார்ஃபீல்ட் சாலையில் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார். லாட்ப்ரோக் பகுதியில் 19 வயது இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 275 பேர்கள் கைது
அத்துடன் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்களும் வெவ்வேறு சம்பவங்களில் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட நாட்டிங் ஹில் கார்னிவலில் மொத்தம் 275 பேர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@Shutterstock
இதில் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல், பாலியல் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ் அதிகாரிகள் மீதும் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, துப்பாக்கியுடன் ஒருவர் காணப்பட, உடனடியாக அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.
@epa
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |