11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக?
பிரித்தானியாவில் நோட்டிங் ஹில் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கானோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பிரித்தானியாவில் விரைவில் நடைபெற இருக்கும் நோட்டிங் ஹில்(Notting Hill Carnival)திருவிழாவில், வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை தடுக்கும் முயற்சியாக பொலிஸார் நூற்றுக்கணக்கானோரை கைது செய்துள்ளது.
“உளவுத்துறை அடிப்படையிலான தலையீடுகள்” என்ற நடவடிக்கையின் கீழ் பிரித்தானியா கிட்டத்தட்ட 100 பேரை கைது செய்துள்ளது.
21 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், 11 துப்பாக்கிகள், 40க்கும் மேற்பட்ட கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கண்காணிப்பு நிபந்தனைகள் மற்றும் காவல்துறை பிணை ஆகியவற்றின் கீழ் 266 பேர் வைக்கப்பட்டுள்ளனர். இவர் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பறிப்போன உயிர்
கடந்த ஆண்டு இந்த நோட்டிங் ஹில் திருவிழாவில் 4 இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகின.
இவற்றில் 2 நபர்கள் தனித்தனி தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். மேலும் 18 பொலிஸார் வரை தாக்கப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இத்தகைய வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவே இந்த ஆண்டு பொலிஸார் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை கையில் எடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |