நாட்டிங்ஹாம் கொலைகாரன் புலம்பெயர் நபர்... மூவர் கொலை சம்பவத்தில் வெளிவரும் பகீர் பின்னணி
பிரித்தானியாவை உலுக்கிய நாட்டிங்ஹாம் மூவர் கொலை சம்பவத்தில் கைதான நபர் வெளிநாட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மூவரை கொலை செய்த நபர்
நாட்டிங்ஹாம் பகுதியில் நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் 54 வயதான வணிகர் என மூவரை கொலை செய்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.
@thesun
இந்த நிலையில், அந்த 31 வயது நபர் தொடர்பில் பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. Bentinck சாலை பகுதியில் வைத்து அந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து நீளமான கத்தி ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மேற்கு ஆப்பிரிக்க நாட்டவர் என்றும் சட்டப்பூர்வ அனுமதி பெற்றே அவர் பிரித்தானியாவில் தங்கி வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது.
@PA
கொலைவெறியுடன் பலமுறை
அத்துடன், பல ஆண்டுகளாக அந்த நபர் பிரித்தானியாவில் வசித்து வருகிறார். மேலும், எந்த குற்றவழக்குகளும் அவர் மீது இதுவரை பதிவாகவில்லை. அத்துடன் அவரது செயற்பாடுகளும் கண்காணிக்கப்படும் வகையில் அமைந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் உளவியல் பாதிப்பு கொண்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் சம்பவத்தின் போது அந்த நபர் கொலைவெறியுடன் பலமுறை கத்தியால் தாக்கியுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
@thesun
மட்டுமின்றி, விடிகாலை 4 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், கொலைக்கு பின்னர் அந்த நபர் மிக அமைதியாக, எந்த பரபரப்பும் இன்றி அப்பகுதியில் இருந்து நடந்து சென்றதாக கூறுகின்றனர்.
இந்திய வம்சாவளி மாணவி கிரேஸ் குமார்
இதனிடையே, கொலை நடந்த பகுதி வழியாக வாடகை டாக்ஸியில் செல்ல நேர்ந்த 21 வயது மூன்றாம் ஆண்டு உளவியல் மாணவி ஒருவர் தெரிவிக்கையில், சாலையில் ரத்தவெள்ளத்தில் இரு உடல்கள் கிடப்பதை பார்த்ததாகவும், டாக்ஸியில் இருந்து வெளியேறி அவர்கள் அருகே சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒருவர் கழுத்து முதல் கால்கள் வரையில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காணப்பட்டார் எனவும், சுயநினைவின்றி காணப்பட்டார் எனவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
@AFP
கொல்லப்பட்டவர்களில் இருவர் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மாணவர்கள். இதில் ஒருவர் இந்திய வம்சாவளி மாணவி கிரேஸ் குமார் என்பதுடன், அவரது தந்தை பிரபல மருத்துவர் எனவும், இவர் இங்கிலாந்து அணிக்காக தெரிவான ஹொக்கி விளையாட்டு வீராங்கனை என்பதும் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |