பிரித்தானியாவை உலுக்கிய சம்பவத்தில் வெளியாகும் புதிய தகவல்... ஒருவர் இந்திய வம்சாவளி மாணவி
பிரித்தானியாவில் நாட்டிங்ஹாம் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதில், ஒருவர் இந்திய வம்சாவளி பல்கலைக்கழக மாணவி என்பது தெரியவந்துள்ளது.
இரு பல்கலைக்கழக மாணவர்கள்
நாட்டிங்ஹாம் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளது புகைப்படங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் இந்திய வம்சாவளி மாணவி 19 வயதான கிரேஸ் குமார் எனவும் அவருடன் பார்னபி வெபர் என்ற நண்பரும் பலியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@thesun
இருவரும் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எனவும், கிரேஸ் ஹொக்கி நட்சத்திரம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பார்னபி வெபர் என்பவர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவும் பொருட்டு அருகாமையில் சென்ற கிரேஸ் குமார் அந்த கொலைகாரனால் கொடூர தாக்குதலுக்கு இலக்கானதாக கூறுகின்றனர்.
மேலும், அந்த நபர் சில மணி நேரம் முன்னர் 54 வயதான ஒருவரை கொன்றுவிட்டு, அவரது வாகனத்தை திருடிச் சென்றதாகவே கூறப்படுகிறது. அத்துடன் அந்த வாகனத்துடன் பாதசாரிகள் மூவர் மீது மோதியதில், ஒருவர் ஆபத்தான நிலையிலும், எஞ்சிய இருவர் லேசான காயங்களுடனும் தப்பியுள்ளனர்.
@thesun
அந்த கொலைகாரன் கைது
அடுத்தடுத்து நடந்த இந்த கோர சம்பவங்களுக்கு பின்னர் துரிதமாக செயல்பட்ட பொலிசார், 31 வயதான அந்த கொலைகாரனை கைது செய்துள்ளனர். பார்னபி வெபர் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் எனவும், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்திற்காக விளையாடியுள்ளார் எனவும் கூறுகின்றனர்.
30 போட்டிகளில் களமிறங்கியுள்ள பார்னபி வெபர் மொத்தம் 622 ஓட்டங்களும் 29 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். சுமார் 4 மணியளவில், கிரேஸ் குமாருடன் பார்னபி வெபர் வீடு திரும்பும் நிலையில் தான் தாக்குதல் நடந்துள்ளது.
@thesun
கிரேஸ் குமார் லண்டனில் Southgate அணிக்காக ஹொக்கி விளையாடியுள்ளார். மட்டுமின்றி, இங்கிலாந்து ஹொக்கி அணியிலும் கிரேஸ் குமார் தெரிவாகியுள்ளார்.
கிரேஸ் குமாரின் தந்தை மருத்துவர் சஞ்சாய் குமார் 2009ல் எசெக்ஸ், சிங்ஃபோர்டில் குழு ஒன்று கத்தியால் தாக்கிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
@getty
விளையாட்டின் மீதான ஆர்வம் காரணமாகவே கிரேஸ் மற்றும் பார்னபி வெபர் ஆகிய இருவரும் நண்பர்கள் ஆனார்கள் என்றும் கூறுகின்றனர்.
@PA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |