இந்திய மாணவி உட்பட... நாட்டிங்ஹாம் மூவர் கொலை வழக்கு குற்றவாளியின் புகைப்படம் வெளியானது
பிரித்தானியாவில் நாட்டிங்ஹாம் பகுதியில் இந்திய மாணவி உட்பட மூவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படம் முதல் முதலாக வெளியிடப்பட்டுள்ளது.
மூவரை கொலை செய்துள்ளதுடன்...
ஆப்பிரிக்க நாட்டவரான 31 வயது Valdo Calocane என்பவரே இந்திய மாணவி உட்பட மூவரை கொலை செய்துள்ளதுடன், திருடிய வாகனம் ஒன்றால் பாதசாரிகள் மூவரை கொலை செய்ய முயன்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
Credit: Ian Whittaker
இதில் காயமடைந்துள்ள ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படமானது கடந்த் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
Valdo Calocane நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்றே கூறப்படுகிறது. இவரால் கொலை செய்யப்பட்ட பார்னபி மற்றும் கிரேஸ் குமார் அதே பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் மருத்துவம் பயின்று வந்துள்ளனர்.
Credit: ITV news
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவில் பிறந்த Valdo Calocane ஆனால் வேல்ஸில் வளர்ந்துள்ளார். இரு பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்த Valdo Calocane பின்னர் 65 வயதான காப்பக ஊழியர் Ian Coates என்பவரை கொன்றுவிட்டு, அவரது வாகனத்துடனே தப்பியுள்ளார்.
துரித நடவடிக்கையால் கைது
நிரந்தரமான முகவரி ஏதுமற்ற Valdo Calocane செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் பொலிசாரின் துரித நடவடிக்கையால் கைது செய்யப்பட்டார்.
@swns
Valdo Calocane கைது செய்யப்படுவதற்கும் 90 நிமிடங்கள் முன்னர் கிரேஸ் மற்றும் பார்னபியின் உடல்கள் இல்கெஸ்டன் சாலையில் அவர்கள் வசிக்கும் அறையிலிருந்து 300 கெஜம் தொலைவில் உள்ள தெருவில் கண்டெடுக்கப்பட்டது.
ஆனால் Ian Coates என்பவரின் சடலம் 2 மைல்களுக்கு அப்பால் மக்தலா சாலையில் 5 மணியளவில் மீட்கப்பட்டது என்றே கூறுகின்றனர்.
@swns
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |