பெருவெள்ளத்தில் மூழ்கிய கனேடிய மாகாணம்... மாயமான பலர்: டசின் கணக்கானோர் வெளியேற்றம்
கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் கன மழை மற்றும் பெருவெள்ளத்திற்கு இரு சிறார்கள் உட்பட நால்வர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனமழையால் வெள்ளப்பெருக்கு
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
@Skye Bryden-Blom
மூன்று மாதங்கள் பெய்ய வேண்டிய மழை, 24 மணி நேரத்தில் பெய்துள்ளதாக கூறுகின்றனர். மேலும், ஆபத்தான சூழல் நீடிப்பதால், மாயமானவர்களை தேடும் பணியில் பொதுமக்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், காணாமல் போன இரண்டு குழந்தைகளும் வெள்ள நீரில் மூழ்கிய காரில் இருந்ததாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி காரில் இருந்த மற்ற 3 பேரும் தப்பியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
அவசர நிலை பிரகடனம்
கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக நோவா ஸ்கோடியாவில் சாலைகள் அடித்து செல்லப்பட்டு பாலங்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. சில பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒருகட்டத்தில் 80,000 மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டதாக கூறுகின்றனர். இதனிடையே, மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் வெளியே நடமாட வேண்டாம் எனவும் நகர நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன.
@reuters
மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஹெலிகொப்டர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |