உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு சிறைத்தண்டனையா?
உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் கோவிட் பரிசோதனையில் பொய் சொன்னது தெரியவந்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள், வருகிற 17ம் திகதி அன்று தொடங்கவுள்ளது.
இதற்காக அவுஸ்திரேலியா வந்த ஜோகோவிச்சுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதுடன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததற்கான உரிய மருத்துவ ஆவணங்கள் ஜோகோவிச்சிடம் இல்லை என கூறப்பட்டது.
இதனை எதிர்த்து ஜோகோவிச் தொடர்ந்த வழக்கில், அவர் வெற்றி பெற்றார், இருப்பினும் கடந்தாண்டு டிசம்பரில் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார்.
அவருக்கு தொற்று உறுதியான பின்னர், எங்கும் பயணம் செய்திருக்கக்கூடாது, ஏனெனில் அரசின் பிரிவு 248-ன்படி - 'தொற்றுநோயின் போது சுகாதார விதிமுறைகளின்படி செயல்படத் தவறினால்' - விதிகளை கடைபிடிக்காதவர்கள், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை சந்திக்க நேரிடும்.
இந்நிலையில் அவர் எங்கு சென்றால் என்பது குறித்து அவுஸ்திரேலிய எல்லை படை விசாரித்து வரும் நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று ஜோகோவிச் பெல்கிரேடில் இருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் முடிவு குறித்து இன்று தெரியவரும் என கூறப்படுகிறது.