பிரஞ்சு ஓபன் வென்ற பிறகு ஜோகோவிச் செய்த நம்பமுடியாத செயல்! துள்ளி குதித்த இளம் ரசிகரின் வீடியோ வைரல்
பிரஞ்சு ஓபன் போட்டியை வென்ற பிறகு நோவக் ஜோகோவிச், தன்னை உற்சாகப்படுத்திய இளம் ரசிகருக்கு தனது ராக்கெட்டை பரிசாக கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
செர்பியா நாட்டைச் சேர்ந்த உலக புகழ்ப்பெற்ற டென்னில் வீரரான நோவக் ஜோகோவிச், ஞாயிற்றுக்கிழமை 2021 பிரஞ்சு ஓபன் போட்டியை வென்று 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
ஜோகோவிச் தனது இறுதி போட்டியை வெற்றிக்கரமாக முடித்த பிறகு, தன்னை உற்சாகப்படுத்திய தனது இளம் ரசிகர் ஒருவருக்கு தேடிவந்து தனது ராக்கெட்டை பரிசாக கொடுத்துச் சென்றார்.
This kid’s reaction when #Djokovic gave him his racket is everything pic.twitter.com/FWd34RJff7
— Drax (@LaMasiaStan) June 13, 2021
ஜோகோவிச்சிடமிருந்து ராக்கெட்டை பெற்ற நொடி முதல் அச்சிறுவன் பெரு மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக்கொண்டே இருந்தார். இந்த சம்பவம் பார்ப்போரை நெகிழவைத்தது. மேலும், அருகில் இருந்த மற்ற ரசிகர்களும் அச்சிறுவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
போட்டி முடிந்து பத்திக்கையாளர்களுடன் உரையாடிய ஜோகோவிச், குறித்த சிறுவனைப் பற்றி பேசினார். அவர் கூறுகையில் "அவன் இறுதி போட்டி முழுவதும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தான். குறிப்பாக நான் இரண்டு செட்களாக இருந்தபோது, அவன் என்னை ஊக்குவித்தான். அவர் உண்மையில் எனக்கு தந்திரங்களை சொல்லிக்கொடுத்தான்" என்று ஜோகோவிச் கூறினார்.
தொடர்ந்து சிறுவனைப் பற்றி பேசிய ஜோகோவிச், அவன் தனது ஓவ்வொரு அசைவுகளுக்கும் ஏற்ப கிட்டத்தட்ட தனக்கு பயிற்சி கொடுத்ததாக கூறினார்.
அவன் உற்சாகப்படுத்தியதன் மூலம் "நான் மிகவும் அழகாக, மிகவும் அருமையாக விளையாடுவதை உணர்ந்தேன். ஆகவே, போட்டிக்கு பின் நான் சிறந்த நபருக்கு எனது ராக்கெட்டை கொடுக்க விரும்பினேன். என்னுடன் ஒட்டிக்கொண்டு எனக்கு ஆதரவளித்ததற்கு எனது நன்றியை வெளிப்படுத்தினேன்" என ஜோகோவிச் கூறினார்.