நவம்பர் மாத ராசிப்பலன் 2021 : நவகிரகத்தின் மாற்றத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன் கிடைக்க போகுது?

horoscope astrology spiritual
By Kishanthini Nov 01, 2021 05:00 AM GMT
Report

நவம்பர் மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட மாதமாக அமையப்போகுது என்பதை பற்றி இங்கே பார்ப்போம். 

மேஷம்

ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றும் மேஷராசியினரே நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பவர். இந்த மாதம் பல நன்மைகள் உண்டாகும். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும்.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும்.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28

ரிஷபம்   

எடுத்த காரியத்தை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்தும் ரிஷபராசியினரே உங்கள் மனம் சுத்தமாய் இருப்பதைப் போல் சுற்றமும் சுத்தமாய் இருக்க வேண்டும் என நினைப்பவர். இந்த மாதம் வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ராசியைப் பார்க்கும் ராசிநாதன் சுக்கிரன் புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் வாங்க தூண்டுவார். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.  

தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது இனி சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும்.  

குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் பெருமாளுக்கு வெண் தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30

மிதுனம்

தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படும் மிதுனராசியினரே நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்பவர். இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். வீட்டில் இருந்து வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு மிக கவனமாக பேசுவ தும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5

கடகம்

மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணமுடைய கடகராசியினரே நீங்கள் திடீரென்று உணர்ச்சி வசப்படக் கூடியவர். இந்த காலகட்டத்தில் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும்.

கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும்.

அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

சிம்மம்

தானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிம்மராசியினரே இந்த காலகட்டம் என்பது உங்கள் வாழ்வில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும். கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வி யில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

கன்னி

மனதில் கொண்ட குறிக்கோளை அடையும் வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் கன்னி ராசியினரே நீங்கள் உங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டு அதில் வாழ்பவர். இந்த மாதம் சில சங்கடங்கள் நேரலாம். கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும்.

கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது.

மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: பைரவரை புதன்கிழமைதோறும் வணங்க திருமண தடை நீங்கும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12

துலாம்

அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆலோசனை கூற தயங்காத துலா ராசியினரே நீங்கள் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும்.

கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து வணங்குவது சுபிட்சத்தை தரும். இல்லறத்தில் இருந்த சச்சரவு தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - செவ்வாய் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

விருச்சிகம்

எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்ளக் கூடிய விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் கொடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் எடுப்பீர்கள். இந்த மாதம் பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். ஆனாலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம்.

தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.

கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமையில் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பமும் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - புதன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

தனுசு

எப்போதும் உற்சாகமாக இருக்கும் தனுசு ராசியினரே நீங்கள் உங்களுடன் பழகுபவர்களும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். இந்த மாதம் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும்.

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி அஷ்டகம் படித்து தட்சிணாமூர்த்தியை வணங்கி வருவதால் பணகஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - புதன் - வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24 அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16  

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 25, 26 அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19

மகரம்

எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதை நிதானமாக செய்து வெற்றி பெறும் மகர ராசியினரே நீங்கள் எப்போதும் நியாயத்தின் பக்கம் இருக்க விரும்புபவர்கள். இந்த மாதம் எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையு டன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம்.

குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.

பெண்களுக்கு எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.

மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தை தரும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

கும்பம்

எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் கும்ப ராசியினரே நீங்கள் உழைப்பதின் மூலம் முன்னுக்கு வர வேண்டும் என விரும்புபவர். இந்த மாதம் கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. சுக்கிரன் சஞ்சாரத்தால் அலைச்சலை சந்திக்க நேரிடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனு சரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.  

பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை.

கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: விநாயக பெருமானை அருகம் புல்லால் அர்ச்சனை செய்து வணங்கு வதால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24

மீனம்

எந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுக்க தெரிந்த மீனராசியினரே நீங்கள் மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும்.

அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.

குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.

மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - திங்கள் - வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US