நவம்பர் 16 சூரிய பெயர்ச்சி: கடின உழைப்பிற்கு அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள்
November Month Sun Transit: நவம்பவர் மாதத்திற்கு ஏற்படும் சூரிய பெயர்ச்சியினால் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறும் ராசியினரை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரிய பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன், கெளரவம், மதிப்பு, தலைமைத்துவம், அரசு வேலை இவற்றிற்கு காரணியாகவும் இருக்கின்றார்.
சிம்ம ராசியின் அதிபதியாக இருக்கும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியினை மாற்றுகின்றார். இவ்வாறான பெயர்ச்சியின் போது சில ராசியினருக்கு தாக்கம் ஏற்படலாம்.
ஒருவரது ஜாகத்தில் சூரியன் வலுவான நிலையில் இருந்தால் தொழிலில் உச்சத்தினை அடைவார்களாம். தற்போது துலாம் ராசியில் பயணித்து வரும் நிலையில், நவம்பர் 16ம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.
ஒரு மாதத்திற்கு பின்பு தனுசு ராசிக்குள் செல்கின்றார். விருச்சிக ராசியின் அதிபதியாக இருக்கும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் இவற்றிற்கு காரணமாக இருக்கின்றார்.
சூரியன், செவ்வாய் இரண்டும் நட்பு கிரகங்களாக இருக்கும் நிலையில் இந்த சூரிய பெயர்ச்சியினால் நன்மையை பெறும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
- ரிஷப ராசியில் 7வது இடத்தில் இருக்கும் சூரியனால் பணப்பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்.
- திடீர் நிதி ஆதாயம், பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்குமாம்.
- நீண்ட கால உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கு்ம்.
- பணி செய்பவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு இதுவாகும்.
- ஏற்கனவே நீங்கள் செய்த முதலீடு தற்போது நல்ல லாபத்தினை கொடுக்கும்.

மிதுனம்
- மிதுன ராசியில் 6வது வீட்டில் சூரியன் செல்வதால், சாதகமான வழிகள் கிடைக்கும்.
- போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல வெற்றியினை பெறுவார்கள்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கட்டாயம் கிடைக்குமாம்.

கன்னி
- கன்னி ராசியில் 3வது வீட்டிற்கு சூரியன் செல்வதால் வசதியும், செல்வமும் அதிகரிக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் காணப்பட்டால் வாய்ப்புகள் கிடைக்குமாம்.
- நிதி நிலையிலும் நல்ல உயர்வை பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கும்.
- குடும்ப பிரச்சனை தீரும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

துலாம்
- துலாம் ராசியில் 2வது வீட்டிற்கு செல்லும் சூரியனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
- கடின உழைப்பிற்கு உயர் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். தொழில் செய்பவர்கள் புதிய நட்பு கிடைக்கும்.
- உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
- விருச்சிய ராசியின் முதல் வீட்டில் சூரியன் செல்வதால் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படலாம்.
- தன்னம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன், ஆளுமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்குமாம்.
- பணி இடத்தில் கடின உழைப்பிற்கு பாராட்டும், அந்தஸ்து, கௌரவமும் உயருமாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |