இப்போது ரஷ்யா உக்ரைனை ஊடுருவியுள்ளது... இதே நாளில் ஜேர்மனி ரஷ்யாவை ஊடுருவியது உங்களுக்குத் தெரியுமா?
ரஷ்யா இன்றைய நாளை நினைவு மற்றும் துயர நாளாக அனுஷ்டிக்கிறது.
ஆம், 1941ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 22ஆம் திகதிதான், ஜேர்மனி திடீரென சோவியத் யூனியனைத் தாக்கியது. இரண்டாம் உலகப்போரின்போது, இதே நாளில்தான் சோவியத் யூனியனை நாஸி ஜேர்மனி ஊடுருவியது, அப்போது சோவியத் யூனியனில் உக்ரைனும் ஒரு பகுதியாக இருந்தது.
அந்த தாக்குதலை நினைவுகூறும் வகையில், ரஷ்ய ஜனாதிபதியான புடின் உயிரிழந்தவர்களை கௌரவிப்பதற்காக இன்று மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்.
Operation Barbarossa என்ற பெயரில் ஜேர்மன் நாஸிப்படைகள் சோவியத் யூனியனுக்குள் ஊடுருவி சோவியத் யூனியனின் சில பகுதிகள், கீவ் நகரம், மாஸ்கோ மற்றும் Brest ஆகிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தின.
⚔️On the morning of June 22, 1️⃣9️⃣4️⃣1️⃣, Yury #Levitan, dubbed the? ‘voice of the war’, made the radio announcement that Nazi Germany forces had attacked the borders of the #USSR. The Great Patriotic War began #OTD 8⃣1⃣ years ago. pic.twitter.com/zTWSg9XNT5
— Russian Embassy in USA ?? (@RusEmbUSA) June 21, 2022
அந்த நாளை நினைவுகூறும் வகையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணங்களில், இப்போது போலவே 1941இலும் நாஸிக்கள் நம் நாட்டை அவமதிப்பதற்காக கோபத்தைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளைத் துவக்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.