இனி Google Pay மூலம் கடன் வாங்கலாம்: மாதத்திற்கு வட்டி எவ்வளவு தெரியுமா?
Google Pay பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் ஒரு புதிய கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் பே
கடந்த 12 மாதங்களில் UPI மூலம் சுமார் 167 லட்சம் கோடி ரூபாய் நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூகுள் பே பிரிவின் துணைத் தலைவர் அம்பரீஷ் கெங்கே தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பார்க்கும் போது யுபிஐ பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்த கூகுள் பேவை அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த செயலியை வடிவமைத்து கூகுள் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
கடன் வசதி
Google Pay பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவும் நோக்கத்தில் கூகுள் நிறுவனம் ஒரு புதிய கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, Google Pay செயலி மூலம் சாசெட் கடன்களை (sachet loans) நாம் பெற முடியும். இந்தியாவில் உள்ள சிறு வர்த்தகங்கள், நிறுவனங்கள், வணிகர்களுக்கு இந்த கடனை வழங்குவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
முக்கியமாக, வணிகர்களுக்கு அடிக்கடி கடன் தேவைப்படும். அவர்கள், வங்கியில் சென்று கடன் கேட்கவும் முடியாது. நண்பர்களிடமும் அடிக்கடி கடன் கேட்க முடியாது. இதனை பயன்படுத்தி கூகுள் இந்த கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
எவ்வளவு வட்டி?
இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள், Google Pay செயலி மூலம் sachet loans என்ற சிறு கடனாக 15,000 ரூபாய் பெற முடியும். இந்த கடன் தொகையை 111 ரூபாய் மாதவட்டியுடன் 12 மாதங்ள் வரை திருப்பிச் செலுத்தலாம்.
இந்த கடன் சேவைகளை வழங்க கூகுள் நிறுவனம் DMI ஃபைனான்ஸ் உடன் சேர்ந்துள்ளது. வணிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய்ய கூகுள் நிறுவனம் ePayLater உடன் இணைந்து Google Pay வாயிலாக செயல்படுத்த உள்ளது.
ஏற்கனவே, கூகுள் நிறுவனம் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுடன் இணைந்து கடன் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |