Non Performing Assets (NPA) என்றால் என்ன? தெரிந்துகொள்வோம்
வங்கிகளில் பயன்படுத்தப்படும் Non Performing Assets (NPA) என்ற term எதை குறிக்கிறது? இந்த செயல்படாத சொத்துக்கள் என்பது என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
90 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள முன்பணம் அல்லது கடனை செயல்படாத சொத்துக்கள் (Non Performing Assets/NPA) என வரையறுக்கப்படுகிறது.
முன்பணம் அல்லது கடனுக்கான அசல் அல்லது வட்டி எதுவும் கட்டப்படவில்லை என்றால் அதனை NPA என வங்கிகள் வகைப்படுத்துகின்றன.
ஆதாவது, "வங்கிக்கு வருமானம் ஈட்டுவதை நிறுத்தும்போது ஒரு சொத்து செயல்படாததாகிவிடும்" என்று RBI 2007-இல் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியுள்ளது.
இந்த செயல்படாத சொத்துக்கள் Substandard, Doubtful மற்றும் Loss assets மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.
1. Substandard assets:
12 மாதங்களுக்கும் குறைவான அல்லது அதற்குச் சமமான காலத்திற்கு செயல்படாத சொத்தாக இருக்கும் கடன் Substandard assets (தரக்குறைவான சொத்துகள்) என கூறப்படுகிறது.
2. Doubtful assets:
முழுமையாக 12 மாதங்களுக்கு ஒரு சொத்து Substandard assets பிரிவில் இருந்தால் சந்தேகத்திற்குரிய சொத்தாக (Doubtful assets) வகைப்படுத்தப்படும்.
3. Loss assets:
இந்திய ரிசர்வ் வங்கியின்படி (RBI), வசூலிக்க முடியாததாகக் கருதப்படும் கடன்கள் Loss assets (இழப்பு சொத்து) என கூறப்படுகிறது.
வங்கிகளைப் பொறுத்தவரை, கடன் என்பது ஒரு சொத்தாக (Asset) இருக்கிறது, ஏனெனில் இந்தக் கடன்களுக்கு நாம் செலுத்தும் வட்டியானது வங்கியின் மிக முக்கியமான வருமான ஆதாரங்களில் ஒன்றாகும்.
வாடிக்கையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அல்லது கார்ப்பரேட்டுகள், வட்டியைச் செலுத்த முடியாதபோது, அது வங்கிக்கு எந்த வருமானத்தையும் ஈட்டாததால், அந்த சொத்து வங்கிக்கு 'செயல்படாததாக' மாறும்.
எனவே, ரிசர்வ் வங்கி NPA களை அவர்களுக்கு வருமானம் ஈட்டுவதை நிறுத்தும் சொத்துக்கள் என வரையறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
What is NPA in Bank, What is Non Performing Assets, Non Performing Assets meaning in Tamil, Non Performing Assets Meaning