UPI பரிவர்த்தனையில் கட்டணங்கள் விதிக்கப்படுமா? என்னென்ன விதிகள்? NPCI விளக்கம்
UPI பரிவர்த்தனைக்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதற்கான விளக்கங்களை NPCI கொடுத்துள்ளது.
UPI பரிவர்த்தனை விதிகள் அறிவிப்பு
ஒன்லைன் பரிவர்த்தனைக்காக UPI பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்ப்படுவதாக வெளியான தகவல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் திகதி அமலுக்கு வரும் கட்டண விதிமுறைகள் குறித்து National Payment Corporation of India (NPCI) விளக்கம் அளித்துள்ளது.
NPCI விளக்கம்
வாடிக்கையாளர்கள் UPI மீதான பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. Wallets மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற PPIகள் மூலம் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் மட்டுமே பரிமாற்றக் கட்டணமாக இருக்கும்.
இந்த கட்டண நடைமுறைகள் Prepaid கட்டண கருவிகள் மூலம் செய்யப்படும் வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இவைகளுக்கு மட்டுமே கட்டணம்
தொலைத்தொடர்பு கல்வி மற்றும் பயன்பாடுகள்/அஞ்சல் அலுவலகங்களுக்கு பரிமாற்றக் கட்டணம் 0.7 சதவீதம் விதிக்கப்படும்.
பல்பொருள் அங்காடிகளுக்கான கட்டணம் பரிவர்த்தனை 0.9 சதவீதம் ஆகும். அதேபோல் காப்பீடு, அரசு, பரஸ்பர நிதிகள் மற்றும் ரயில்வேக்கு 1 சதவீதம், எரிபொருளுக்கு 0.5 சதவீதம் மற்றும் விவசாயத்திற்கு 0.7 கட்டணம் விதிக்கப்படும்.
@Shutterstock