UPI செயலிகள் மூலமே பணம் எடுக்கும் முடியும் - ATM கார்டு கூட தேவையில்லை
UPI செயலிகள் மூலமே பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த NPCI திட்டமிட்டு வருகிறது.
UPI மூலம் பணம் எடுக்கலாம்
இந்தியாவில், UPI செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 25 ட்ரில்லியன் ரூபாய் மதிப்புள்ள, 19.5 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், UPI செயலிகள் மூலம் பரிவர்த்தனை மட்டுமல்லாது, பணம் எடுக்கும் வசதியையும் அறிமுகப்படுத்த இந்திய தேசிய கட்டணக் கழகம் NPCI திட்டமிட்டு வருகிறது.
தற்போது UPI மூலம், குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்கள் மற்றும் கடைகளில் மட்டுமே பணம் எடுக்கும் வசதி உள்ளது.
இதில், நகர்ப்புறங்களில், ரூ.1,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.2,000 எடுக்க முடியும் என்ற வரம்பு உள்ளது.
இந்த புதிய பரிந்துரைப்படி, பரிவர்த்தனைக்கு ரூ.10,000 வரை எடுக்க முடியும். இதற்காக நாடு முழுவதும் 20 லட்சம் வணிக முகவர் (Business Correspondents) மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
BC மையங்கள்
வணிக முகவர்கள் என்பது, குறைந்த வங்கி கிளைகள் அல்லது ஏடிஎம்கள் இல்லாத பகுதிகளில் அடிப்படை வங்கி சேவைகளை வழங்கும் உள்ளூர் நபர்கள் ஆவார்கள். இவர்கள் கடைக்காரர்களாகவோ, இலாப நோக்கற்ற நிறுவனங்களாகவோ அல்லது தனிநபர்களாகவோ கூட இருக்கலாம்.
இதன்படி, ஒவ்வொரு வணிக மையத்திற்கு ஒரு தனி QR Code வழங்கப்படும். பயனர்கள் இதனை எந்த ஒரு UPI செயலி மூலமும் ஸ்கேன் செய்து, பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
ஏடிஎம் பயன்படுத்த சிரமப்படுபவர்கள் மற்றும் கை ரேகையை பதிய சிக்கலை எதிர்கொள்பவர்களுக்கு இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திட்டம் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கோரி NPCI விண்ணப்பித்துள்ளது. மேலும், இது திட்டமிடுதல் நிலையிலே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், கடந்த காலங்களில் திருட்டு மற்றும் சைபர் மோசடி குற்றங்களில் பல வணிக முகவர்கள் சிக்கியுள்ளதால், இதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |