இனி UPI மூலம் EMI செலுத்தலாம் - NPCI புதிய திட்டம்
UPI கட்டணத்தை EMI ஆக பிரிக்கும் வசதிக்கு NPCI அனுமதி வழங்க உள்ளது.
இந்தியாவில், UPI செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
UPI மூலம் EMI
இந்நிலையில், UPI செயலிகளில் கடன் பரிவர்த்தனையை அதிகரிக்க இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.
இதன்படி, பயனர்கள் கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் போது அதனை EMI ஆக பிரிக்கும் வசதியை வழங்குகிறது.
POS முனையத்தில், கார்டு மூலம் பணம் செலுத்தும் போது அதனை EMI ஆக மாற்றும் வசதியை போல் இது செயல்படும்.
UPI செயலியில் ரூபே கிரெடிட் கார்டுகள் பிரபலமாகி வரும் நிலையில், விரைவில் நிதி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு EMI கட்டண வசதியை UPI-யில் சேர்க்கும் அனுமதியை NPCI வழங்கும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நவி தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் நரேஷ், "இன்னும் EMI வசதியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. NPCI தயாரிப்பு வழிகாட்டுதல்கள் மூலம் அனுமதித்துள்ள அடுத்த பதிப்பில், QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் கட்டத்தில், EMI ஆக பிரிக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |