NPS Vatsalya Yojana திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.., ரூ.1000 முதலீடு செய்தால் போதும்
NPS Vatsalya Yojana திட்டம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவு உங்களுக்கானது.
குழந்தைகளுக்கான அரசு திட்டம்
தற்போதைய காலத்தில் பணத்தின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருவதால் குழந்தைகளுக்கு தேவையான நிதியை திட்டமிடுவது அவசியமாக மாறிவிட்டது. இதனால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு பணத்தை சேமித்து வருகின்றனர்.
அரசின் NPS Vatsalya Yojana திட்டமானது சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பது மட்டுமல்லாமல், பெற்றோருக்கு வரியைச் சேமிக்கவும் உதவுகிறது.
இந்த திட்டமானது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் முதலீட்டுத் திட்டமாகும். இதில் பணத்தை முதலீடு செய்தால் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும்.
உங்களுடைய குழந்தைக்கு இந்த திட்டத்தின் கீழ் கணக்கை திறப்பதற்கு ரூ.1000 செலுத்தினால் போதும். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.
பின்னர் உங்களுடைய குழந்தைக்கு 18 வயது ஆனவுடன் NPS கணக்காக மாற்றப்பட்டு அதை இயக்கும் உரிமையை குழந்தை பெறுகிறது.
இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80CCD (1B) இன் கீழ் பெற்றோர்கள் ரூ.50,000 வரை கூடுதல் வரி விலக்கு பெறலாம். இந்தப் பலன் ரூ.1.5 லட்ச வரம்பிற்கு கூடுதலாகும்.
இது ஒரு நீண்ட கால திட்டம் என்பதால் எதிர்காலத்தில் பெரிய தொகையாக மாறும்.
* மாதத்திற்கு ரூ.1000 முதலீடு செய்தால் 18 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.2,16,000 ஆக இருக்கும். அதன்படி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பிடப்பட்ட நிதி ரூ.6,00,000 ஆக இருக்கும்.
* மாதத்திற்கு ரூ.4000 முதலீடு செய்தால் 18 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.8,64,000 ஆக இருக்கும். அதன்படி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பிடப்பட்ட நிதி ரூ.24,00,000 ஆக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |