ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனையை விமர்சித்த சுவிஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ்
ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஒருவரை விமர்சித்த சுவிஸ் துப்பாக்கி தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் Manu Bhakerம் ஒருவர். Manu Bhaker சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் பெற்றவர்.
அத்துடன் மிக இளம் வயதில் உலகக் கோப்பை சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகளில் தங்கம் வென்றவர் என்ற பெருமையும் அவரைச் சாரும். இந்நிலையில், ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற Manu Bhakerஇன் துப்பாக்கி திடீரென பழுதானது.
அதை Manu Bhakerஇன் பயிற்சியாளரான Ronak Pandit வாங்கி சரி செய்து கொடுத்தார். ஆனால், அதற்குள் நேரமாகிவிடவே Manu Bhakerஆல் போதுமான சுற்றுகள் சுட முடியாமல்போனது.
ஆகவே, அவர் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தார். துப்பாக்கி பழுதானதால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாத வருத்தத்தில் இருந்தாலும், அந்த துப்பாக்கியை குறை சொல்லவில்லை யாரும்.
ஆனால், Manu Bhaker பயன்படுத்திய சுவிஸ் தயாரிப்பான Morini என்ற அந்த துப்பாக்கி நிறுவனத்தின் உரிமையாளரான Francesco Repich, தேவையில்லாமல் இந்திய வீராங்கனையையும் பயிற்சியாளரையும் விமர்சித்து பேஸ்புக்கில் இடுகைகள் பதிவிட்டுக்கொண்டே இருந்தார்.
இந்திய வீரர்கள் சிலர் மிகவும் வயது குறைந்தவர்கள், இப்போதுதான் அவர்கள் சீனியல் லெவல் போட்டிகளில் நுழைந்துள்ளார்கள்.
அவர்கள் போதுமான பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் அல்ல என்று வீரர்களை விமர்சித்திருந்தார் Repich.
அத்துடன், அந்த பயிற்சியாளரே பழுதான துப்பாக்கியை சரி செய்வதற்கு பதிலாக, எங்களிடம் கொண்டுவந்திருந்தால் சீக்கிரம் பழுதை சரி செய்துகொடுத்திருப்போம் என்று பயிற்சியாளரையும் விமர்சித்திருந்தார் அவர்.
இதே போல் விமர்சனங்கள் தொடர, கோபமடைந்த பயிற்சியாளரான Pandit, யார் இந்த ஆள், இவரது நோக்கம் என்ன, எதற்காக தினமும் இதுபோல் இவர் பேஸ்புக்கில் இடுகைகள் இடுகிறார், இந்திய அணிக்கு தொல்லை கொடுப்பதுதான் இவரது நோக்கமா? என பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், இந்திய தேசிய துப்பாக்கி சுடும் கூட்டமைப்பு, இந்திய வீராங்கனையான Manu Bhakerஐயும் பயிற்சியாளரான Ronak Panditஐயும் விமர்சித்த Morini துப்பாக்கி நிறுவனத்தின் உரிமையாளரான Francesco Repichக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, Repich தான் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த இடுகைகளை அகற்றிவிட்டார்.