திருப்பதி தேவஸ்தானத்திற்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI தொழிலதிபர்
வேண்டுதலை நிறைவேற்றியதற்காக NRI தொழிலதிபர் ஒருவர், திருப்பதி வெங்கடாசலபதிக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) ஒரு பெயர் தெரியாத பக்தர், ரூ.140 கோடி மதிப்பிலான 121 கிலோகிராம் தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
இந்த தகவலை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, Public, Private, People, Partership எனும் திட்டத்தை தொடங்கும் நிகழ்வில் வெளியிட்டுள்ளார்.
இந்த பக்தர் பல வருடங்களுக்கு முன் திருப்பதி சென்று வேண்டியுள்ளார். பின்னர் அவர், அமெரிக்கா சென்று ஒரு IT நிறுவனத்தை தொடங்கி, அதில் 60 சதவீத பங்குகளை விற்று ரூ.6,000 கோடிக்கு மேல் வருமானம் பெற்றுள்ளார்.
இந்த வெற்றிக்கு திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் என நம்பி, தங்கத்தை காணிக்கையாக வழங்க முடிவு செய்துள்ளார்.
அவர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், தன்னனுடைய பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த தங்கத்தின் எடை, கருவறையில் தெய்வத்தை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து ஆபரணங்களின் எடைக்கு சமமானதாக இருப்பதாக முதல்வரை தெரிவித்துள்ளார்.
இது, சமூகத்திற்கு நன்றியுணர்வு மற்றும் கடவுள் நம்பிக்கையின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
NRI gold donation Tirupati, 121kg gold to Lord Venkateswara, Tirumala Tirupati Devasthanam news, Rs 140 crore temple donation, Chandrababu Naidu TTD announcement, anonymous devotee gold offering, richest temple donations India, devotional news India 2025, temple gold donation record, Venkateswara temple latest news