இளம்பெண்ணின் சொல்லைக்கேட்டு வெள்ளை மாளிகை அலுவலர்களை வேலையை விட்டு தூக்கிய ட்ரம்ப்
புதன்கிழமை, இளம்பெண்ணொருவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, உடனடியாக வெள்ளை மாளிகையின் முக்கியமான, மூத்த அலுவலர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.
யார் அந்தப் பெண்?
இப்படி ட்ரம்ப்வெள்ளி மாளிகை அலுவலர்களை வேலையை விட்டு தூக்க காரணமாக இருந்த அந்த இளம்பெண்ணின் பெயர் லாரா லூமர் (30).
லாரா, ட்ரம்புக்கு நெருக்கமான ஒரு வலதுசாரி அரசியல் ஆர்வலர் ஆவார். நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என ஒருமுறை லாராவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், அவர் நான் ட்ரம்ப் மீது கவனம் செலுத்துவதிலேயே நோக்கமாக இருப்பதாக கூறினார்.
ஆம், நம்மைவிட நமக்கு ட்ரம்ப் முக்கியம், அவர் நம் நாட்டைக் காப்பாற்றப் போகிறார். ஆகவே, அவர் மீது கவனம் செலுத்தவேண்டியுள்ளது. எனக்கு ட்ரம்ப்தான் முக்கியம் என்று கூறியிருந்தார்.
வெள்ளி மாளிகை அலுவலர்களை வேலையை விட்டு தூக்கிய ட்ரம்ப்
ஆக, ட்ரம்பை சந்தித்த லாரா, வெள்ளை மாளிகை அலுவலர்களில் சிலர், ட்ரம்புக்கு உண்மையாக இல்லை என்று கூறி, அவர்களை பணிநீக்கம் செய்யவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
யாரையெல்லாம் வேலையை விட்டு தூக்கவேண்டும் என்ற பட்டியலையும் லாரா ட்ரம்பிடம் கையளித்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்துதான் வெள்ளை மாளிகை அலுவலர்களில் சிலர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் குறித்து ஊடகவியலாளர்கள் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பியபோதும் அவர், நமக்குப் பிடிக்காதவர்கள், இவர்களால் வேலையை செய்ய முடியாது என நாம் எண்ணுபவர்கள் மற்றும் வேறு யாருக்கோ உண்மையாக இருப்பவர்கள் என சிலரை நாங்கள் வெளியேற அனுமதிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டு ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சுழன்று சுழன்று பணியாற்றிய ட்ரம்ப் ஆதரவாளர்களில் ஒருவர் லாரா என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |