வட்டி மட்டுமே ரூ.4 லட்சத்துக்கு மேல் கிடைக்கும் Post Office திட்டம் பற்றி தெரியுமா?
அஞ்சல் அலுவலக திட்டத்தில் வட்டி மட்டுமே ரூ.4 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும் திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்களது பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அஞ்சல் அலுவலகம் ஒரு சிறந்த வழியாகும். அதேபோல, மக்கள் தான் சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.
அது பாதுகாப்பாகவும், சிறந்த பலனை தரக்கூடியவையாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அம்சங்களை கொண்டது தான் தபால் அலுவலகத்தின் திட்டங்கள்.
அதில், அதிக வட்டி அளிக்கக்கூடிய தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate)
கடந்த ஆண்டு ஏப்ரல் 1 -ம் திகதி முதல் தபால் அலுவலகத்தின் (Post Office) பல சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசு உயர்த்தியுள்ளது.
அந்தவகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) திட்டத்தின் முதலீட்டாளர்களுக்கு 7.7% வட்டி விகிதம் கிடைக்கிறது.
அரசால் நடத்தப்படும் இந்த திட்டத்தின் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. எந்தவொரு தபால் அலுவலக கிளைக்கும் சென்று இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் வட்டித் தொகையுடன் சேர்த்து அசல் தொகையையும் பெறுவார்கள்.
எவ்வளவு முதலீடு?
இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஆண்டுக்கு 7.7% வட்டி கிடக்கும். அப்போது உங்களுடைய முதலீடு 5 ஆண்டுகளுக்கான Log-in காலத்தில் இருக்கும்.
அதன்படி உங்களுடைய வட்டி தொகை மட்டுமே 5 ஆண்டுகளில் ரூ.4,49,034 ஆக இருக்கும். மொத்தமாக அசல் மற்றும் வட்டியை சேர்த்து ரூ.14,49,034 -யை பெறுவீர்கள்.
இந்த திட்டத்தின் கீழ் உங்களுடைய முதலீடு முதிர்ச்சியடையும் போது இந்த பணத்தை அதை ரொக்கமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த பணத்தை உங்களது வங்கிக்கணக்கிற்கு மாற்றும் வசதியும் உள்ளது.
அதேபோல நீங்கள் இந்த பணத்தை எடுக்காமல் NSC Account -ல் வைத்திருந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தில் உங்களது தொகைக்கு வட்டி கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |