இனி தங்கத்தை போல் மின்சாரத்தையும் வாங்கி விற்கலாம் - எப்படி தெரியுமா?
இந்தியாவில், மின்சார ஃபியூச்சர்ஸை NSE அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சார ஃபியூச்சர்ஸ்
இந்திய தேசிய பங்கு சந்தை(NSE), மாதாந்திர மின்சார ஃபியூச்சர்ஸை(Monthly Electricity Futures) அறிமுகப்படுத்தியுள்ளது.
Features இல் தங்கம் கச்சா எண்ணெய் ஆகியவற்றை வாங்கி, விற்று வர்த்தகம் செய்வது போல், இனி மின்சாரத்தையும் வாங்கி விற்று வர்த்தகம் செய்ய முடியும்.
முன்னதாக, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் (CERC) கட்டுப்படுத்தப்படும், இந்திய எரிசக்தி பரிமாற்றத்தில் (IEX) மட்டுமே இந்த வர்த்தகம் நடைபெற்று வந்தது.
கடந்த ஜூன் 14 ஆம் திகதி, இந்திய தேசிய பங்கு சந்தையிலும்(NSE), மின்சார ஃபியூச்சர்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எப்படி செயல்படும்?
இதில், பங்குசந்தையில் பங்குகளை வாங்கி விற்பது போல், எதிர்கால தேவைகளுக்காக மின்சாரத்தை முன்கூட்டியே வாங்கி விற்கும் ஒப்பந்தமே மின்சார ஃபியூச்சர்ஸ் ஆகும்.
உதாரணத்திற்கு, தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சம் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. மின்சார விலை ஒவ்வொரு மாதமும் மாறுகிறது.
தற்போது தமிழ்நாடு, NSE மின்சார ஃபியூச்சர்ஸ், ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சம் யூனிட் மின்சாரம் வாங்க ₹6.00/யூனிட் என ஒப்பந்தம் செய்தால், ஆகஸ்ட் மாதத்தில் விலை எப்படி இருந்தாலும், தமிழ்நாடு ₹6.00/யூனிட்க்கே வாங்க முடியும்.
ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்கால விலை அதிகமாக இருந்தால், தமிழ்நாடு லாபம் பெரும், குறைந்தால் நஷ்டம் அடையும்.
யார் வர்த்தகம் செய்யலாம்?
மின்சார வர்த்தகம் தொடங்கிய முதல் நாளில், 200 மில்லியன் யூனிட் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஒரு மெகாவாட்(MWh) ரூ.4,368 என்ற சராசரி விலையில், ரூ.87.36 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
அதேவேளையில், இந்த மின்சார ஃபியூச்சர்ஸ்ல் அனைவரும் ஈடுபட முடியாது. மின்சார உற்பத்தியாளர்கள், மின்சார விநியோக நிறுவனங்கள், பெரு உள்ளிட்டோர் மட்டுமே இதில் வர்த்தகம் செய்ய முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |