அவுஸ்திரேலியாவில் கையில் கோடாரியுடன் சுற்றிய பெண்: பொலிஸார் சர்ச்சைக்குரிய துப்பாக்கியை பயன்படுத்த தடை
அவுஸ்திரேலிய பொலிஸாரல் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அடாவடியில் ஈடுபட்ட பெண்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நியூகாசில் பகுதியில் இளம்பெண் ஒருவர் கையில் கோடாரி ஒன்றுடன் சாலையில் சென்று கொண்டு இருந்த பொதுமக்களை துரத்தி மிரட்டி வருவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கையில் கோடாரியுடன் சுற்றித் திரிந்த பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்தனர்.
ஆனால் அந்த பெண் பொலிஸாரையும் கோடாரியால் தாக்க முற்பட்டதால் சம்பந்தப்பட்ட பெண்ணை எப்படியாவது விரைவில் கைது செய்ய வேண்டுமென்ற நோக்கில் அதிரடி நடவடிக்கைக்கு தயாராகினர்.
ரப்பர் குண்டு துப்பாக்கியால் தாக்கிய பொலிஸார்
பெண்ணை எப்படியாவது கட்டுப்படுத்தியாக வேண்டும் என்ற நோக்கில் பொலிஸார் ரப்பர் குண்டுகளை கொண்ட துப்பாக்கியால் அப்பெண்ணை சுட்டனர்.
சுடப்பட்ட அந்த ரப்பர் குண்டு பெண்ணின் மார்பு பகுதியில் பட்டதால் படுகாயமடைந்து அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
பின் உடனடியாக அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
தற்காலிக தடை
பொலிஸாரின் ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த பெண் 47 வயதுடைய கிறிஸ்டா கேச் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் பெண் ஒருவர் ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொலிஸாரின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் சர்ச்சைக்குரிய ரப்பர் குண்டு துப்பாக்கிகளை பயன்படுத்த பொலிஸாருக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |