கரூரில் வழக்கில் தவெகவை திமுக காப்பாற்றுகிறது - கொந்தளிக்கும் நாம் தமிழர் (காணொளி)
கரூர் சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் தவெக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கரூர் சம்பவம்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணையை தவெக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
சட்டமன்றத்தில் கரூர் சம்பவம் குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு சிறை
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அளித்த நேர்காணலில் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதில் பேசிய அவர், "இந்த வழக்கில் விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? புஸ்ஸி ஆனந்தை இத்தனை நாட்களாக கைது செய்யாதது ஏன்? விஜய் வேண்டுமென்றே தாமதமாக சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய்யின் அலட்சியப்போக்கே இந்த உயிரிழப்பிற்கு காரணம். 41 பேர் உயிரிழந்த பின்னர் கூட விஜய்க்கு ஒரு குற்ற உணர்ச்சி இல்லை.
அஜித்குமார் உயிரிழப்பிற்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என கூறிய தவெக இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்பது ஏன்? இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டுமென்றால் விஜய் சிறைக்கு தான் போக வேண்டும்" என பேசியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |