விஜய் வீடியோ கால் பேசவில்லை! திமுகவுக்கு ஆதரவாக சீண்டும் சீமான்? (காணொளி)
திமுகவை தாண்டி விஜய்யை நாம் தமிழர் கட்சியினர் விமர்சிக்கின்றனர் என்ற கருத்து நிலவுவது குறித்து, அந்த கட்சியைச் சேர்ந்த பாத்திமா பர்ஹானா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, ஒரு கட்சியினால் அசம்பாவிதங்கள் நடந்துள்ளது என்பது தெரிந்தும் எடப்பாடி அவர்கள், கொடி பறக்கிறது என்று கூறி தன்வயப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் மனநிலை தேர்தல் லாபத்திற்காக எடுக்கும் நிலைப்பாடு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
பாஜகவும், திமுகவும் இதையேதான் செய்கிறார்கள். இவையனைத்தையும் தாண்டி நாம் தமிழர் கட்சி இவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நேர்மையாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
நாம் தமிழர் கட்சி இன்று இவ்வளவு தூரம் அரசியல் செய்து வந்திருக்கிறது என்றால், எங்களது தொடக்கமே ஈழத்தின் மரணங்கள்தான் என்று நினைக்கிறேன். எத்தனை உயிர்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டு மண்ணில் வீழ்ந்தார்கள் என்று நமக்கு தெரியும்.
அங்கே இருந்து மலர்ந்ததுதான் நாம் தமிழர் கட்சி. ஒரு உயிரின் மதிப்பு என்ன என்பது எங்களுக்கு தெரியும் என்கிறார்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |